10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான வினாவங்கி புத்தகங்கள் வழங்கப்படும் இடம் தேதி அறிவிப்பு...

published 1 year ago

10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான வினாவங்கி புத்தகங்கள் வழங்கப்படும் இடம் தேதி அறிவிப்பு...

கோவை: தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான வினா வங்கி புத்தகங்கள் கோவையில் வழங்கப்படும் தேதி மற்றும் இடம் ஆகியவற்றை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 

இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரால் தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான வினாவங்கி புத்தகங்கள் ராஜவீதி பகுதியில் உள்ள அரசு துணி வணிகர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி (கோ.து.வ.ச) யில் வருகின்ற 26ஆம் தேதி முதல் வழங்கப்பட உள்ளதாகவும் வினா வங்கி புத்தகங்கள் தேவைப்படும் பள்ளி மாணவர்கள் பெற்றோருடனோ அல்லது பள்ளிகள் வாயிலாகவோ பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் 10ம் வகுப்பு மாதிரி வினாத்தாள் புத்தகம்(தமிழ் வழி, ஆங்கில வழி) 120 ரூபாய், 10ம் வகுப்பு கணித தீர்வு புத்தகம்(ஆங்கில வழி) 175 ரூபாய், 12ம் வகுப்பு மாதிரி வினாத்தாள் தொகுப்பு புத்தகம்(தமிழ் வழி, ஆங்கில வழி) 160 ரூபாய், 12ம் வகுப்பு கணித தீர்வு புத்தகம்( தமிழ் வழிய ஆங்கில வழி) 160 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் அரசு வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe