கோவை வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்களின் நேரம் மாற்றம்

published 2 years ago

கோவை வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்களின் நேரம் மாற்றம்

கோவை, ஜூலை.1 சேலம் - மேக்னசைட் நிலையங்கள் இடையே ரயில் பாதையில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் ஜூலை 4 (திங்கள்கிழமை) கோவை வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஜூலை 4 ஆம் தேதி ஆலப்புழாவில் காலை 6 மணிக்கு புறப்படும் ஆலப்புழா - தன்பாத் விரைவு ரயில் (எண்: 13352) 3 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்.

கோவை நிலையத்தில் இருந்து 3.05 மணிக்கு சென்னைக்கு புறப்படும் சதாப்தி விரைவு ரயில் (எண்:12244) 1 மணி நேரம் 30 நிமிடம் தாமதமாகப் புறப்படும்.

எர்ணாகுளத்தில் இருந்து காலை 9.10 மணிக்கு பெங்களூரு செல்லும் விரைவு ரயில் (எண்: 12678) 3 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்.

கோவையில் இருந்து மாலை 3.15 மணிக்கு சென்னை புறப்படும் கோவை எக்ஸ்பிரஸ் (எண்: 12676) 1 மணி நேரம் 30 நிமிடம் தாமதமாகப் புறப்படும்.

இதேபோல, ஜூலை 4 ஆம் தேதி, கொச்சுவேலியில் இருந்து கோா்பா செல்லும் விரைவு ரயில் (எண்: 22648) 40 நிமிடங்கள் தாமதமாகப் புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe