இந்த வருஷம் அரசு விடுமுறை நாட்கள் மட்டும் 1 மாதம் மக்களே..! எந்தெந்த நாட்கள் தெரியுமா?

published 1 year ago

இந்த வருஷம் அரசு விடுமுறை நாட்கள் மட்டும் 1 மாதம் மக்களே..! எந்தெந்த நாட்கள் தெரியுமா?

சென்னை: நடப்பு ஆண்டில் அரசு விடுமுறை தினங்கள் மட்டும் 24 நாட்கள் வருகின்றன.

நல்ல எண்ணங்களோடும், மகிழ்ச்சியோடும், மகிழ்ச்சியை வரவழைக்கும் காரணிகள் குறித்த சிந்தனைகளோடும் தொடங்குகிறது புத்தாண்டு.

இந்த வருடத்தில் நாம் இதை செய்தே ஆக வேண்டும் என்று பலரும் பல இலக்குகளை நிர்ணயித்து புத்தாண்டை தொடங்குவர்.

பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகள் புத்தாண்டின் காலெண்டர் வீட்டுக்கு வந்ததுமே இந்த வருஷத்தில் எத்தனை நாட்கள் 'லீவ்' என்று கும்பலாக அமர்ந்து கணக்கிடுவர். அது அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி தானே. நாம் நமது மாணவப்பருவத்திலும் இதனை செய்திருப்போம் அல்லவா?

அந்த வகையில் நடப்பு 2024ம் ஆண்டில்  எத்தனை நாட்கள் அரசு விடுமுறை, அவை எந்தெந்த தேதிகளில் வருகின்றன என்பதை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

தமிழகத்தில் அரசு விடுமுறை நாட்கள்:

1)ஜன.1 - திங்கட்கிழமை - ஆங்கிலப் புத்தாண்டு
2)ஜன.15 - திங்கட்கிழமை - பொங்கல்
3)ஜன.16 - செவ்வாய்க்கிழமை - திருவள்ளுவர் தினம்
4)ஜன.17 - புதன்கிழமை - உழவர் திருநாள்
5)ஜன.25 - வியாழக்கிழமை - தைப்பூசம்
6)ஜன.26 - வெள்ளிக்கிழமை - குடியரசு தினம்

7)மார்ச்.29 - வெள்ளிக்கிழமை - புனித வெள்ளி
8)ஏப்.1 - திங்கட்கிழமை - வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு (வணிக / கூட்டுறவு வங்கிகள்)
9)ஏப்.9 - செவ்வாய்க்கிழமை - தெலுங்கு வருடப் பிறப்பு
10)ஏப்.11 - வியாழக்கிழமை - ரம்ஜான்
11)ஏப்.14 - ஞாயிற்றுக்கிழமை - தமிழ்ப் புத்தாண்டு / டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பிறந்த தினம்.
12)ஏப்.21 -ஞாயிற்றுக்கிழமை - மகாவீரர் ஜெயந்தி

13) மே1 - ஞாயிற்றுக்கிழமை - மே தினம்
14)ஜுன்.17 - திங்கட்கிழமை - பக்ரீத்
15)ஜுலை.17 - புதன்கிழமை - மொகரம்
16)ஆக.15 - வியாழக்கிழமை - சுதந்திர தினம்
17)ஆக.26 - திங்கட்கிழமை - கிருஷ்ண ஜெயந்தி

18)செப்.7 - சனிக்கிழமை - விநாயகர் சதுர்த்தி
19)செப்.16 - திங்கட்கிழமை - மிலாதுன் நபி
20)அக்.2 - புதன்கிழமை - காந்தி ஜெயந்தி
21)அக்.11 - வெள்ளிக்கிழமை - ஆயுத பூஜை
22)அக்.12 - சனிக்கிழமை - விஜய தசமி
23)அக்.31 - வியாழக்கிழமை- தீபாவளி
24)டிச.25 - புதன்கிழமை - கிறிஸ்துமஸ்

2024 ஆம் ஆண்டில் 24 நாட்கள் அரசு விடுமுறை தினங்கள் வருகின்றன. இதில் 4 விடுமுறை நாட்கள் மட்டும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வருகின்றன. இந்த விடுமுறை தினங்களை காட்டி உங்கள் குழந்தைகளையும், பணிக்கு செல்லும் உங்கள் கணவன்/மனைவியை குஷிப்படுத்துங்கள்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe