கோவையில் தமிழ் எழுத்துக்களால் உருவாக்கப்பட்ட 20 அடியில் திருவள்ளுவர் சிலை- ஸ்டாலின் திறந்து வைக்கிறார்..!

published 1 year ago

கோவையில் தமிழ் எழுத்துக்களால் உருவாக்கப்பட்ட 20 அடியில் திருவள்ளுவர் சிலை- ஸ்டாலின் திறந்து வைக்கிறார்..!

கோவை: குறிச்சி குளக்கரையில் தமிழ் எழுத்துக்களால் உருவாக்கப்பட்ட 20 அடி உயரம் கொண்ட திருவள்ளுவர் சிலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை  காணொலி காட்சி மூலம் திறந்து வைக்க உள்ளார்.

கோவை மாநகராட்சி  ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.  மாநகராட்சியில் உள்ள 7 குளங்கள் சீரமைக்கப்பட்டு அழகுபடுத்தபட்டு,  குளக்கரைகளில் பொழுதுபோக்கு அம்சங்கள் ஏற்படுத்தபட்டுள்ளன.

இதன் ஒரு பகுதியாக கோவை- பொள்ளாச்சி சாலையில் உள்ள குறிச்சி குளத்திலும் ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் தமிழ் எழுத்துகளை கொண்டு சுமார் 2.5 டன் எடையில் 20 அடி உயரத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த  திருவள்ளுவர் சிலையை நாளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார்.

இதனையடுத்து  திருவள்ளூவர் சிலை மற்றும் அந்த குளத்தினை சுற்றியுள்ள பகுதிகளில் பராமரிப்பு பணிகளை  மாநகராட்சி ஊழியர்கள் செய்து வருகின்றனர். மேலும், இரவு நேரங்களில் ஜொலிக்கும் வண்ணம் வண்ண விளக்குகளும் பொருத்தபட்டு வருகிறது.

உலகப்பொதுமறையாம் திருக்குறளை எழுதிய திருவள்ளுவரை தமிழ் எழுத்துக்களால் உருவாக்கி காட்சிப்படுத்தியுள்ள மாநகராட்சி  நிர்வாகத்தை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

சிலையின் காட்சிகளை காண்பதற்கு லிங்க்கை கிளிக் செய்யவும்…

https://www.youtube.com/watch?v=gQD0kgzpo_w

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe