பொள்ளாச்சியில் தாய் அசந்த நேரத்தில் பச்சிளம் குழந்தை கடத்தல்..! பெண் பரபரப்பு வாக்குமூலம்

published 2 years ago

பொள்ளாச்சியில் தாய் அசந்த நேரத்தில் பச்சிளம் குழந்தை கடத்தல்..! பெண் பரபரப்பு வாக்குமூலம்

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் 

 

கோவை: பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட பச்சிளம் பெண் குழந்தையை 24 மணி நேரத்தில் மீட்ட போலீசாருக்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணையில் ஈடுபட்ட போலீசார் பாராட்டு தெரிவித்தார்.

பொள்ளாச்சி குமரன் நகரை சேர்ந்த திவ்யபாரதி என்பவர் கடந்த ஐந்து தினங்களுக்கு முன்பு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் ஆரோக்கியமாக இருந்த நிலையில், டிஸ்சார்ஜ் செய்யப்பட இருந்தனர்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கு திவ்யபாரதி அசந்து தூங்கிக் கொண்டிருந்தார். அவர் கண் விழித்து பார்த்த போது அருகில் படுக்க வைத்திருந்த குழந்தை மாயமானதைக் கண்டு கடும் அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணனுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து துணை காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிசிடிவி காமிராக்கள் இல்லாத காரணத்தினால் மருத்துவமனைக்கு உள்ளேயும், பொள்ளாச்சியில் இருந்து கோவை செல்லும் வழியிலும் உள்ள சுமார் 150க்கும் மேற்பட்ட சிசிடிவி காமிராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது ஒரு பெண் குழந்தையை கடத்திச் செல்வதும் அவருடன் ஒரு சிறுமி இருப்பதும் தெரியவந்தது.

தொடர்ந்து அவர்களை பின்தொடர்ந்த போலீசார், கேரள மாநிலம் பாலக்காட்டை அடுத்த கொடுவாயூரில் வைத்து ஜெமினா (34) என்ற பெண்ணை பிடித்தனர். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். தற்போது கணவனை பிரிந்து மணிகண்டன் என்பவருடன் வாழ்ந்து வரும் நிலையில், மணிகண்டன் தனக்கும் வாரிசாக ஒரு குழந்தை வேண்டுமென்று கேட்டதன் பேரில் ஜெமினா தான் கர்ப்பமாக இருப்பது போல் போலியாக நடித்து வந்துள்ளார். 

இதனிடையே பொள்ளாச்சி வந்த அவர் தனக்கும் குழந்தை பிறந்துள்ளதாக மணிகண்டனிடம் பொய் கூறியதோடு, தனது மகளை அழைத்துக் கொண்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் திவ்யபாரதிக்கு பிறந்த குழந்தையை கடத்தி சென்றுள்ளார். 

தொடர்ந்து ஜெமினாவிடம் இருந்து குழந்தையை மீட்ட போலீசார் அதனை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். ஞாயிறன்று அதிகாலை மாயமான பச்சிளம் குழந்தையை திங்கட்கிழமை அதிகாலையிலேயே போலீசார் மீட்டுள்ளனர். இந்த வழக்கில் தீவிரமாக பணியாற்றிய போலீசாருக்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் வெகுவாக பாராட்டினார். 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe