ஆதித்யா L1: சுத்திப்போடுங்க சார் நம்ம இந்தியாவுக்கு!

published 1 year ago

ஆதித்யா L1: சுத்திப்போடுங்க சார் நம்ம இந்தியாவுக்கு!

கோவை: சூரியனை ஆய்வு செய்ய இஸ்ரோவால்  அனுப்பப்பட்டுள்ள ஆதித்யா விண்கலம் இன்று மாலை தனது இலக்கான எல்1 என்ற புள்ளியைச் சென்றடையும் என்று ஸ்ரோவால் கூறப்பட்ட நிலையில் L1 என்ற பகுதியை ஆதித்தியா வெற்றிகரமாக அடைந்துள்ளதாக இஸ்ரோ அறிவித்திருக்கிறது.

உலக நாடுகள் பல சூரியனை ஆராய்ச்சி செய்து வரும் நிலையில் நமது இந்தியாவும் தனது ஆத்தியா L1 என்ற விண்கலத்தைக் கடந்த செப்டம்பர் மாதம் சூரியன் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள இஸ்ரோவால் அனுப்பப்பட்டது. இந்த ஆதித்யா எல் 1 விண்கலம் சூரியனின் வெப்பம், காந்த துகள்கள் வெளியேற்றம், விண்வெளியின் காலநிலை, விண்வெளியில் உள்ள துகள்கள் ஆகியவை குறித்து ஆய்வு செய்யும். மேலும், இது சூரியினில் ஏற்படும் காந்த புயல்கள் குறித்தும் ஆய்வுகளை செய்து நமக்கு செய்திகளை அனுப்பும் சிறப்பம்சம் கொண்டது.  இந்த காந்த புயல்களானது பூமியைத் தாக்கும் போது அவை மொத்தமாக சாட்டிலைட் செயல்பாடுகளையும், மின்சார கட்டமைப்புகளை முடக்கிப் போடும் அபாயம் இருக்கிறது.

மற்ற நாடுகளின் விண்கலங்களைக் காட்டிலும் ஆதித்யா L1 னை செலுத்தக் குறைந்த செலவுகளில் ஸ்ரோ இந்த விண்கலத்தை வடிவமைத்து விண்ணில் செலுத்தியது, அதுமட்டும் இன்றி மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியாவின் ஆதித்யாவில் பல சிறப்பம்சங்களும் இடம்பெற்றிருக்கிறது என்பது   நம்மை பெருமை அடையச் செய்வதாகவே உள்ளது. இதன் காரணமாகவே ஆதித்யா விண்கலத்தின் ஆய்வுகள் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. கடந்தாண்டு விண்ணில் செலுத்தப்பட்ட ஆத்தியா விண்கலம் சுமார் 15 லட்சம் கி.மீ தொலைவில் உள்ள 'லெக்ராஞ்சியன் பாயிண்ட் ஒன்'(எல்-1) என்ற தனது இலக்கை நோக்கிப் பயணித்து வந்தது. இந்தச் சூழலில் ஆதித்யா விண்கலம் இன்று தனது இலக்கை அடைந்து 127 நாள் பயணத்தை நிறைவு செய்யும் என்று இஸ்ரோவால் கூறப்பட்ட  நிலையில்;

இன்று மாலை 4 மணியளவில் நமது இந்தியாவின் ஆதித்யா எல்-1 அதன் பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது. இது அடுத்த 5 ஆண்டுகளுக்குச் சுற்று வட்டப்பாதையில் சுற்றியபடி சூரியன் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு இந்த உலகிற்குப் பயனுடைய பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு நம்மை பெருமை அடையச் செய்யும்

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe