Big Breaking : சென்னை, கோவையில் தீவிரவாத தடுப்பு பிரிவு உருவாக்கம்; அதிகாரிகள் நியமனம்!

published 1 year ago

Big Breaking : சென்னை, கோவையில் தீவிரவாத தடுப்பு பிரிவு உருவாக்கம்; அதிகாரிகள் நியமனம்!

சென்னை மற்றும் கோவை மாவட்டங்களில் பயங்கரவாத தடுப்பு பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு ஐ.பி.எஸ் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் மற்றும் சொந்த ஊர்களில் பணியாற்றும் போலீசாரை இடமாற்றம் செய்ய  டி.ஜி.பி கடந்த வாரம் சுற்றறிக்கை அனுப்பியிருந்தார்.

இதனிடையே தமிழகம் முழுவதும் 48 ஐ.பி.எஸ்., அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசின் முதன்மை செயலாளர் அமுதா உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவிலேயே சென்னை மற்றும் கோவை மாவட்டங்களில் பயங்கரவாத தடுப்பு பிரிவு உருவாக்கம் தொடர்பான அறிவிப்பும் வெளியாகி உள்ளது.

அதன்படி, சென்னையில் கியூ பிரிவு கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் சசிமோகன் கோவை மாவட்ட பயங்கரவாத தடுப்பு பிரிவு கண்காணிப்பாளராகவும், மதுரை மாநகர காவல் துணை ஆணையராக பணியாற்றி வரும் ஸ்நேகா பிரியா சென்னைக்கும் பயங்கரவாத தடுப்பு பிரிவு கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe