PACL முதலீட்டாளர்களின் பணம் வட்டியுடன் கிடைக்க நடவடிக்கை எடுக்க கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்...

published 1 year ago

PACL முதலீட்டாளர்களின் பணம் வட்டியுடன் கிடைக்க நடவடிக்கை எடுக்க கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்...

கோவை: கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு PACL முதலீட்டாளர்களின் பணம் வட்டியுடன் கிடைக்க விரைவில் நீதிமன்றம், மத்திய, மாநில அரசுகள் ஆவணம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி விவசாய முன்னேற்ற கழகம் களப்பணியாளர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாடு முழுவதும் PACL என்ற நிறுவனத்தில் 5.85 கோடி மக்கள் 49.100 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர்.கடந்த 2016-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் ஓய்வு பெற்ற நீதி அரசர் R.M லோதா தலைப்பில் கமிட்டி அமைக்கப்பட்டு 3 மாத காலத்தில் முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்பி கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

ஆனால் 7 வருடங்களாக பணத்தை திருப்பி காலதாமதம் செய்து வருகின்றனர்.முதலீட்டர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு விரைந்து பணத்தை வட்டியுடன் கிடைக்க ஆவண செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதியரசரின் கவனத்தை ஈர்க்க இந்த ஆர்ப்பாட்டமான நடைப்பெற்றது.

முதலீடு பணத்தை திரும்ப தராததால் 70 வயது கடந்தவர்கள் அடிக்கடி ஏற்படும் உடல் நலகுறைவால் மருத்துவ சிகிச்சைக்கு பணம் இல்லாமல் பெரும் சிரமத்தில் பாதிப்பு அடைந்துள்ளனர்.

மேலும் குழந்தைகளுக்கு திருமணம் செய்ய பணம் இல்லாமாலும், அன்றாட குடும்ப நடத்துவதற்கு கூட பணம் இல்லாமலும் சிரமத்தை சந்தித்து வருகின்றதாக தெரிவித்தனர்.

எனவே மத்திய,மாநில அரசுகள் நீதிமன்றத்தில் தீர்ப்பை கருத்தில் கொண்டு உடனடியாக விரைந்து முதலீட்டு பணத்தை முதலீட்டாளர்களுக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe