விடிய விடிய படிச்சும் எல்லாம் மறந்துபோச்சேன்னு ஃபீல் பண்ணுறீங்களா? இதான் காரணம்!

published 10 months ago

விடிய விடிய படிச்சும் எல்லாம் மறந்துபோச்சேன்னு ஃபீல் பண்ணுறீங்களா? இதான் காரணம்!

வருஷம் முழுக்க ஜாலியா இருந்துட்டு எக்ஸாமுக்கு முதல் நாள் சிலபஸ் தேடித்தேடி, நண்பர்கள், புடிச்சவன், புடிக்காதவன் எல்லோர்கிட்டயும் நோட்ஸ் கடன் வாங்கி, இரவு விடிய விடிய படிச்சு, காலையில் அரைகுறையா ரெடியாகி எக்ஸாம் எழுத போறவங்க பலர். உங்களுக்கும் கூட இந்த பழக்கம் இருக்கலாம்.

ஆனால்  இவ்வளவு சிரமப்பட்டும் நம்மால் எக்ஸாமில் எதையும் முழுதாக ஞாபகம் வைத்து எழுத முடியலையேன்னு யோசிச்சு இருக்கீங்களா...! நம்மோட இந்த உழைப்பை எல்லாம் சுரண்டி அபேஸ் பண்ணுறது இந்த தூக்கம் தான்... என்னது தூக்கமா..? எப்படின்னு யோசிக்கிறீங்களா? உங்களுக்குத் தான் இந்த பதிவு; படியுங்க புரியும்.

நாம் எல்லாரும் வீட்டிற்கு மளிகை பொருள் வாங்கவோ அல்லது நமது தினசரி உபயோகத்திற்குத் தேவையான பொருட்கள் வாங்கவோ ஷாப்பிங் போவோம் இல்லையா.? வீட்டுக்குத் திரும்பினதும் வாங்கிட்டு வந்த பொருட்களை எல்லாம், அந்தந்த பொருட்களுக்கென நம் வீட்டில் ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கிற இடத்தில் எடுத்து வைப்போம்.

பிறகு தேவைப்படும் பொழுது அந்த பொருட்களைத் தேடாமல், அதற்கு உரிய இடத்திலிருந்து எடுத்து உபயோகிக்கிறோம் இல்லையா, அதுபோலத்தான் நம் மூளையும் செயல்படுது.. விடிய விடிய படிச்சு நிறைய புது விஷயங்களை நம் மூளைக்குள் இறக்குமதி பண்ணினோம் இல்லையா, அந்த சரக்க ஃபுல்லா தூங்கும் பொழுது தான் நம் மூளை நாம் படித்த அந்த தகவலை அதற்கு உரிய இடத்தில் போய் சேர்க்கும்.

இவ்வாறு மூலை தகவல்களை அதற்கு உரிய இடத்தில் சேர்த்த பிறகு, குறிப்பிட்ட பதிலுக்கான கேள்வி கேட்கப்படும் பொழுது, சில துடுப்புகளைக் கொண்டு அந்த தகவலுக்கு உரிய இடத்தில் இருந்து பதிலை மீட்டெடுத்து நம் ஞாபகத்திற்குக் கொண்டு வந்து நாம் விடையளிக்க உதவுகிறது.

நாம் தூங்கவில்லை எனில், அந்த தகவலை உரிய இடத்தில் கொண்டு சேர்க்கும் 'கன்சாலிடேஷன்' எனக் கூறப்படும் செயல்முறையானது நடைபெறாமல் நாம் சேகரித்த தகவல்கள் எல்லாம் தொலைந்துவிடுகிறது.

நம் எக்ஸாம் ஹாலில் சென்று அமர்ந்து நம் இஷ்ட தெய்வங்களை கும்பிட்டு வினாத் தாளை திறந்து கேட்கப்பட்டுள்ள கேள்விகளை படிக்கும் பொழுது அது இதுவரை நம் நினைவிலே தென்படாத வேற்று மொழி கலவையைப் போல் தென்படும் அல்லவா, அதற்கும் தூக்கமின்மையே காரணம்.

இதற்கு முன் நாம் ஷாப்பிங்க் கொண்டு சென்றோமே ஒரு பை, அந்த பையின் கொள்ளவை எட்டிய பின் நம்மால் அதனுள் பொருட்களை போட முடியாது அல்லவா, அதே போல் நம் மூளையின் 'ப்ராசெசிங்க் ஸ்பேஸ்' சுத்தம் செய்யப்படவில்லை எனில் அங்கு நம் புரிதலுக்கு மற்றும் பிற அறிவாற்றல் செயலாக்கங்கள் நடைப்பெற தேவையான இடம் இல்லாமல் போய்விடும். அதனால் நாம் படிக்கும் விடைகளை நாம் புரிந்துகொள்வதிலும் சிரமம் ஏற்படும். 

இப்போ புரியுதா இந்த தூக்கத்தோட அருமையும் அவசியமும். அதனால இப்போ என்ன சொல்ல வரோம்ன்னா ஃபிரெண்ட்ஸ், கொஞ்சமா படிச்சாலும் நிறையா தூங்க மறந்துடாதீங்க.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe