கோவையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு- மொத்தம் எத்தனை வாக்காளர்கள் என்ற விவரங்கள் இதோ..!

published 1 week ago

கோவையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு- மொத்தம் எத்தனை வாக்காளர்கள் என்ற விவரங்கள் இதோ..!

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி வெளியிட்டார்.

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், வாக்காளர் பதிவு அலுவலர்கள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்), தனி வட்டாட்சியர் (தேர்தல்) மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின் அடிப்படையில்,   கோயம்புத்தூர் மாவட்டத்தில் 15,43,073 ஆண்கள், 16,05,516 பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் 650 பேர் என ஆக மொத்தம் 31,49,239 வாக்காளர்கள் உள்ளனர்.

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் பெயர், வயது உள்ளிட்டவைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளுதல் மற்றும் வாக்காளர் பெயருடன் ஆதார் எண் இணைத்தல் ஆகிய சிறப்பு சுருக்கத் திருத்தப்பணிகள் அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களிலும் மேற்கொள்ளப்படும். வாக்காளர்கள் 29.10.2024 முதல் 28.11.2024 பிற்பகல் முடிய உள்ள காலம் வரை விண்ணப்பங்களை நேரில் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் - 2025-யினை முன்னிட்டு வருகின்ற 16.11.2024 (சனிக்கிழமை), 17.11.2024 (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 23.11.2024 (சனிக்கிழமை), 24.11.2024 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் உள்ள அனைத்து நிர்ணயிக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களிலும் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. 

எனவே, 01.01.2025-ஆம் தேதியில் 18 வயதினைப் பூர்த்தி செய்பவர்கள் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரினை புதியதாக சேர்க்கவும், வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளில் திருத்தம் செய்யவும், மற்றும் பெயர்கள் நீக்கம் செய்யவும் வேண்டுபவர்கள் www.vsp.in என்ற இணையதளம் மூலமாகவும், Voter Helpline என்ற மொபைல் செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்தல் மற்றும் ஆதார் எண் இணைத்திட 28.11.2024 வரை மனுக்கள் பெறப்படும் எனவும் மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe