சென்னை, கோவை, மதுரையில் அடுத்த 7 நாட்கள் வானிலை முன்னறிவிப்பு! : பொங்கலுக்கு எப்படி?

published 1 year ago

சென்னை, கோவை, மதுரையில் அடுத்த 7 நாட்கள் வானிலை முன்னறிவிப்பு! : பொங்கலுக்கு எப்படி?

சென்னை: தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரையில் வரும் 17ம் தேதி வரை வானிலை எப்படி இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துக் கூறியுள்ளது.

தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை வழக்கத்திற்கு அதிகமாக பதிவாகியுள்ளது. இதனிடையே வரும் 15ம் தேதியோடு வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் நிறைவடைய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.

இந்த சூழலில் சென்னை, கோவை மற்றும் மதுரையில் அடுத்த ஏழு நாட்களுக்கு வானிலை முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

அந்த வகையில் சென்னையில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் 12ம் தேதி முதல் 17ம் தேதி வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் இந்த நாட்களில் மழைக்கு வாய்ப்பு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவையில் ஒரு சில இடங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், நாளை ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், 13ம் தேதி  முதல் 17ம் தேதி வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் இந்த நாட்களில் மழைக்கு வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல் மதுரையில் இன்று ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், நாளை ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான வழக்கு வாய்ப்பு இருப்பதாகவும் 13ம் தேதி முதல் 17ம் தேதி வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் இந்த நாட்களில் மழைக்கு வாய்ப்பில்லை என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எனவே பொதுமக்கள் வானிலை முன்னறிவிப்புக்கேற்றவாறு தங்களது பயணத் திட்டங்களை வகுத்துக் கொள்ளலாம்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe