கோவையில் பி.எம்.ஜே ஜூவலஸ்-ன் முதல் ஷோரும் துவக்கம்

published 2 years ago

கோவையில் பி.எம்.ஜே ஜூவலஸ்-ன் முதல் ஷோரும் துவக்கம்

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/EjTtcBnBSk61kfgvff3n15   

கோவை : கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் பி.எம்.ஜே ஜூவல்ஸ்-ன் முதல் விற்பனையகம் துவங்கப்பட்டுள்ளது.

ஐதராபாத்தை சேர்ந்த பி.எம்.ஜே ஜூவல்ஸ் கடந்த 50 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே ஆந்திரா, தெலுங்கானாவில் இந்த நிறுவனத்தின் கிளைகள் உள்ளன. இந்தியா முழுக்க 24 ஷோரூம்கள் இந்த நிறுவனத்திற்கு உள்ளன. இந்த நிலையில், பி.எம்.ஜே தனது கிளைகளை தமிழகம் மற்றும் கர்நாடகத்திலும் துவக்கி வருகிறது.

அதன்படி, கோவை ஆர்.எஸ்.புரத்தில் இந்த நிறுவனத்தின் புதிய கிளை துவங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பி.எம்.ஜே நிறுவனத்தின் மண்டல மேலாளர் ஹைதர் அலி மற்றும் தமிழக தொழில் தலைவர் செந்தில்குமார் நடராஜன் ஆகியோர் கூறுகையில், "கோவை அனைத்து தொழில்களுக்கும் வரவேற்பு கொடுக்கும் ஒரு நகரமாக இருப்பதால் கோவையில் எங்கள் கிளையை துவக்கியுள்ளோம். நகைகளையும் நமது கலாச்சாரத்தையும் பிரிக்க முடியாது. எப்போதும் நகைகளுக்கான தேவை மக்களுக்கு இருக்கும்.

எங்கள் நிறுவனத்தில் 5 லட்சம் டிசைன்கள் உள்ளன. கோவையில் மட்டும் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட டிசைன்கள் உள்ளன. எங்கள் ஒரு கிளையில் இருந்து வீடியோ ஸ்டோர் மூலமாக அனைத்து கிளைகளில் உள்ள நகைகளையும் பார்த்து அதனை வாங்கலாம்.

கோவை மக்களின் விருப்பத்திற்கேற்ப தற்போது நகைகளை தயாரித்து விற்பனைக்கு வைத்துள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe