கோவை சட்டக் கல்லூரியில் கலை கட்டிய பொங்கல் திருவிழா

published 1 year ago

கோவை சட்டக் கல்லூரியில் கலை கட்டிய பொங்கல் திருவிழா

கோவை: கோயமுத்தூர் அரசு சட்டக் கல்லூரியில் தமிழர் திருநாளான பொங்கல் விழா நிகழ்ச்சிகள்  நடைபெற்றன. இதில் மாணவர்கள், பேராசிரியர்கள் ஒன்றாக இணைந்து பொங்கல் வைத்து மகிழ்ந்தனர்.

கோவை அரசு சட்டக் கல்லூரியில் 5 ஆண்டு சட்டப் படிப்பு மற்றும் 3 ஆண்டு சட்டப் படிப்புகளில் சுமார் 1500 மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர்.

பொங்கல் பண்டிகை ஒட்டி பல்வேறு கல்லூரிகளிலும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் கோவை சட்டக் கல்லூரியிலும் பாரம்பரிய முறையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

அந்த வகையில் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து பொங்கல் வைத்து ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக் கொண்டனர்.

மேலும், நாட்டுப்புற கலைகள், சிலம்பாட்டம் , போன்ற கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

 இவ்விழாவிற்கு கல்லூரி முதல்வர் கே.எஸ்.கோபால கிருஷ்ணன் தலைமை வகித்தார்.

இவ்விழாவில் கல்லூரி மாணவ மாணவிகள் பேராசிரியர் கலந்து கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe