கேப்டன் விஜயகாந்தின் வாழ்வியல் முறையை அடுத்த தலைமுறையினருக்கு கடத்த அனைவரும் முயற்சிக்க வேண்டும்- சினேகன் பேட்டி...

published 1 year ago

கேப்டன் விஜயகாந்தின் வாழ்வியல் முறையை அடுத்த தலைமுறையினருக்கு கடத்த அனைவரும் முயற்சிக்க வேண்டும்- சினேகன் பேட்டி...

கோவை: கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் தலை முடி பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் விதமாக விக்கோமேனியா ஸ்டோர் திறக்கப்பட்டது. இதனை கவிஞர் மற்றும் திரைப்பட நடிகர் சினேகன் மற்றும் கன்னிகா ஆகியோர் திறந்து வைத்தனர். தொடர்ந்து ஆலம் விழுதுகள் தலைவர் மீனா ஜெயக்குமார் மற்றும் இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் தாளாளர் சரஸ்வதி கண்ணையன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி வைத்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த சினேகன், தான்  ஏறத்தாழ 3000 பாடல்களை கடந்து விட்டதாகவும், 2 படங்களுக்கு வசனம் எழுதி வருவதாகவும், சில படங்களில் நடித்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும் இலக்கியம் சார்ந்த பணிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்த அவர், இந்த ஆண்டில் ஒரு பெரிய நாவலை தயாரித்து வருவதாகவும் மேலும் 3 கவிதை தொகுப்புகள், 2 கட்டுரை தொகுப்புகள் இந்த ஆண்டு வரவுள்ளதாக தெரிவித்தார். முன்பெல்லாம் கதைகளில் பல கிளைகள் இருக்கும் எனவும் அவ்வாறு இருக்கும் பட்சத்தில் பல விஷயங்களை கூற முடியும் என தெரிவித்த அவர் இன்றைக்கு ஒரு 
நிகழ்வே கதையாக மாறிவிடுவதால் அழுத்தமான பாடல்களை திரைத்துறையில் வைக்க முடியவில்லை என்ற கவலை இருப்பதாக தெரிவித்தார். 

ஆரோக்கியமான பாடல்கள் குறைவு தான் என்பதை ஒப்புக் கொள்வதாக தெரிவித்த அவர் அது மீண்டு வரும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்தார். கவிஞர்கள் பாடகர்கள் இயக்குனர்கள் எல்லாம் வெவ்வேறு இடத்திலிருந்து செல்போன் மூலமாக தகவல்களை பகிர்ந்து கொள்வதனை ஒரு ஆரோக்கியமான விஷயமாக நான் கருதுவதில்லை என தெரிவித்த அவர் அனைவரும் ஒரு இடத்தில் ஒன்றுகூடி தகவல்களை பரிமாறிக் கொண்டு பணி செய்யும் பொழுது தான் ஆரோக்கியமான பாடல்கள் கிடைக்க பெறும் எனவும் தெரிவித்தார். பாடல்கள் தான் நம் கலாச்சாரத்தின் அடிநாதம் எனவும் கூறினார்.  அனைத்து நிகழ்வுகளுக்கும் நம்மிடம் பாடல்கள் உள்ளது என கூறிய அவர் ஒரு ஃபேசனுக்காக வேண்டுமென்றால் பாடல்கள் இல்லாத படம் எடுக்கலாமே தவிர அதன் நிலைக்காது என்றார். கடந்த ஐந்து வருடங்களாக சப்தத்திற்குள் சினிமா மாட்டிக் கொண்டுள்ளது என தெரிவித்த அவர் அதனை மீட்டெடுக்க வேண்டியது ரசிகர்களாகிய நம்முடைய பணி என்றார். 

கேப்டன் விஜயகாந்த் மனித நேயமிக்க மனிதர் என புகழ்ந்த சினேகன் கட்சியையும் தொண்டர்களையும் மீறி அனைவருக்கும் அவர் மேல் ஒரு பிடித்தம் இருந்தது என தெரிவித்தார். நானும் அவருடன் இணைந்து பணி புரிந்ததுள்ளேன் எனவும் மகிழ்ந்தார். விஜயகாந்த் சினிமாவின் இக்கட்டான நிலையை மீட்டெடுத்ததும் சரி கண்ணுக்குத் தெரியாமல் செய்த உதவிகளும் சரி இது போன்ற அவரது எண்ணங்களும் சிந்தனைகளும் அவரது பெயரும் அடுத்த தலைமுறையினரை சேர வேண்டும் என்றால் நாம் கண்டிப்பாக ஏதாவது செய்ய வேண்டும் எனவும் அவரது வாழ்வியல் முறையை அடுத்த தலைமுறைக்கு கடத்துவதற்கு நாம் அனைவரும் முயற்சிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe