கோவை வடவள்ளி சந்திரசேகர் இல்லத்தில் ஐ டி அதிகாரிகள் அதிரடியாக ரெயிடு

published 2 years ago

கோவை   வடவள்ளி சந்திரசேகர் இல்லத்தில் ஐ டி அதிகாரிகள் அதிரடியாக ரெயிடு

நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளர், கன்ஸ்ட்ரக்ஸன் , காண்டிராக்ட் டெண்டர்களை எடுத்து பணிகளைச் செய்துவருகின்றார் வடவள்ளி சந்திரசேகர்.

தமிழ்நாடு முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணியின் வலதுகரமாக பார்க்கப்படுபவர் வடவள்ளி சந்திரசேகர். வடவள்ளி சந்திரசேகரை பொருத்தவரையில் அதிமுகவின் அதிகார பலமிக்க முன்னணி தலைவர்களுக்கு நெருக்கமாக இருப்பவர். அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது நாளிதழின்  வெளியீட்டாளர் வடவள்ளி சந்திரசேகர்  டெண்டர்களை எடுத்து கன்ஸ்ட்ரக்ஷன் பணிகளை மேற்கொண்டார். கல்யாண மண்டபம், ரியல் எஸ்டேட் , ஆலயம் டிரஸ்டு உள்ளிட்ட உடமைகளுக்கும் வடவள்ளி சந்திரசேகர் உரிமையாளராக இருக்கின்றார். இந்த நிலையில் டெண்டர் எடுத்து கோடிக்கணக்கில் ஊழல் செய்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் எஸ் பி வேலுமணி உள்ளிட்டோரின் வீட்டில் ரெய்டு நடத்திய போது இவரது வீட்டிலும் ரெய்டு நடத்தப்பட்டு இருந்தன.

 இந்த நிலையில் வடவள்ளி சந்திரசேகர் வீட்டில் இன்று மூன்றாவது முறையாக ரெயிடு நடந்துவருகின்றன. இந்த மூன்றாவது ரைடு பொருத்தவரையில் ஐடி அதிகாரிகள் பரிப்பு புகாரின் அடிப்படையில் ரெய்டு நடத்தி வருகின்றனர். வடவள்ளி சந்திரசேகர் இதுவரை மொத்தமாக இரண்டு லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளின் ரைடுக்கும் ஒரு வருமான வரித்துறை அதிகாரிகளின் ரையிடுக்கும் உள்ளாகியிருக்கிந்றார். வடவள்ளி சந்திரசேகருக்கு சொந்தமான மொத்தம் ஆறு இடங்களில் ரெயிடு நடந்துவருகின்றன. அதிமுக வழக்கறிஞர் அணியினரும் தொண்டர்களும் நிர்வாகிகளும் வீட்டிற்க்கு வர ஆரம்பித்திருக்கின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe