குடியரசு தினத்தை முன்னிட்டு சுதந்திர போராட்ட வீரர்களையும் தியாகிகளையும் போற்றும் விதமாக வடிவமைக்கப்பட்ட கார்...

published 1 year ago

குடியரசு தினத்தை முன்னிட்டு சுதந்திர போராட்ட வீரர்களையும் தியாகிகளையும் போற்றும் விதமாக வடிவமைக்கப்பட்ட கார்...

கோவை: கோவை நேரு விளையாட்டு அரங்கம் பகுதியில் RM Car Decors என்ற கார் மறு வடிவமைப்பு நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர் இம்ரான், நிர்வாக இயக்குநர் நயீம் அகமத்.  இவர்களின் குழுவினர் நாட்டின் 75வது குடியரசு தினத்தை முன்னிட்டு சுதந்திர போராட்ட வீரர்களையும்  தியாகிகளையும் பெண் விடுதலை வீரர்களையும் நினைவு கூறும் விதமாக அவர்களுடைய ஒரு காரை சுமார் 7-8 லட்சம் செலவு செய்து மாற்றி வடிவமைத்துள்ளனர்.

அந்த காரில் உள்ள இருக்கைகளின் நுணிகள், கதவுகளில் தேசிய கொடியின் மூன்று வண்ணங்களையும் மேலும் காருக்குள் முன்புறம் இரண்டு ஸ்பீக்கர்களை பொருத்தி அதன் மேலும் தேசிய கொடியின் வண்ணங்களை தீட்டியுள்ளனர்.

காரின் பின்புறம் காண்போரை கவரும், வண்ணம் பல்வேறு அம்சங்களை இவர்கள் வடிவமைத்துள்ளனர். காரின் பின்பக்கம் உள்ள பொருட்கள் வைக்கும் இடம் முழுவதும் டிஸ்ப்ளே, ஸ்பீக்கர்கள், இந்திய வரைப்படம், தமிழ்நாடு வரைப்படம், திருக்குறள்கள், அசோக சக்கரம், மூவர்ண விளக்குகள் என பலவற்றை வடிவமைத்து காண்போரை ஆச்சரியம் படும்படி செய்துள்ளனர். காரின் பின்புற இருக்கைகளுக்கு பின் இரண்டு டிஸ்ப்ளேகளையும் இருக்கைகளுக்கு மேல் ஸ்பீக்கர்களையும் வைத்து அதில் சுதந்திர போராட்ட வீரர்கள், தியாகிகள், பெண் விடுதலை வீராங்கனைகளின் வாழ்க்கை குறிப்புகளையும் அவர்களின் விடுதலை போராட்ட குறிப்புகளையும் வீடியோவாக ஒலிபரப்பு செய்கின்றனர். 

இந்த இரண்டு டிஸ்ப்ளேகளுக்கு இடையில் ஒரு சிறிய திரையை பொருத்தி அதில் காந்தியடிகளின் தண்டியாத்திரை புகைப்படத்தையும், நெசவு இயந்திரத்தையும் ஒளிரவிட்டுள்ளனர். இருக்கைகளுக்கு பின்புறம் கீழ் தேசிய மூவர்ணத்தை ஒளிப்பட்டைகள் போலும் அதற்கு நடுவில் ஒரு ஸ்பீக்கரை பொருத்தி அதில் அசோக சக்கரத்தையும் வரைந்துள்ளனர். அதற்குள் ஒரு புறம் உழவு தொழிலை குறிக்கும் "சுழன்றும் ஏர் பின்னது" என துவங்கும் திருக்குறளையும், "தள்ளா விளையும் தக்காரும்" என துவங்கும் திருக்குறளையும், மறு புறம் JAI HIND, INQUILAB ZINDABD என்ற வார்த்தையும் அச்சிட்டுள்ளனர். அதற்கு கீழ் இரு கண்ணாடிகளை பொருத்தி ஒரு கண்ணாடிக்குள் இந்தியாவின் வரைப்படத்தையும் மற்றொரு கண்ணாடிக்குள் தமிழ்நாடு வரைபடத்தையும் வடிவமைத்து அதில் தமிழ்நாடு வரைபடத்திற்குள் தமிழ்நாடு அரசின் முத்திரையை வடிவமைத்து  தமிழ்நாட்டைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயர்களையும் இந்தியா வரைபடத்திற்குள் தாஜ்மஹால், இந்தியா நுழைவு வாயிலின் படத்தை வடிவமைத்து பெண் சுதந்திர போராட்ட வீரான்கள் தியாகிகளின் பெயரை அச்சிட்டு கண்ணாடி முழுவதும் தேசிய கொடியின் மூன்று வண்ணங்களை ஒளிர செய்துள்ளனர். இந்த இரண்டு கண்ணாடிக்கு மத்தியிலும் ஒரு ஸ்பீக்கரை வைத்து தேசிய கொடி வண்ணங்களை தீட்டியுள்ளனர்.

இது குறித்து  நயீம் அகமத் கூறுகையில் சுதந்திரத்திற்காக போராடிய வீரர்களையும் தியாகிகளையும் குறிப்பாக பெண் விடுதலை வீரர்கள் தியாகிகளை போற்றும் வகையில் இதனை வடிவமைத்துள்ளதாக தெரிவித்தார். இதில் குறிப்பாக தமிழ்நாட்டை சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களை நினைவு கூறும் வகையில் அவர்களது பெயர்களை இதில் அச்சட்டுள்ளதாக தெரிவித்தார். மாவட்ட ஆட்சியரையும் மாநகராட்சி ஆணையாளரையும் சந்தித்து அவர்கள் அனுமதி அளிக்கும் பட்சத்தில் குடியரசு தின விழா தினத்தன்று வ.உ.சி மைதானத்தில் இந்த காரை மக்கள் பார்வைக்கு வைக்க உள்ளதாக தெரிவித்தார். மேலும் அரசு நிகழ்ச்சிகள், அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லூரிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் அவர்களை தங்களை தொடர்பு கொள்ளும் பட்சத்தில் அங்கும் இந்த காரை வைக்க தயாராக இருப்பதாக தெரிவித்தார். மேலும் இந்த காரை தேசத்திற்காக அர்ப்பணித்து விடுவதாகவும் தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe