கோவையில் பயங்கரவாத தடுப்பு பிரிவு உருவாக்கம்…

published 1 year ago

கோவையில் பயங்கரவாத தடுப்பு பிரிவு உருவாக்கம்…

கோவை: கோவையில் புதியதாக பயங்கரவாத தடுப்பு பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கு எஸ்.பி.,யாக சசிமோகன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் தலைமையில் ஒரு டி.எஸ்.பி., 3 இன்ஸ்பெக்டர் உள்பட 40 போலீசார் பணிபுரிய உள்ளனர். இந்த பயங்கரவாத தடுப்பு பிரிவு அலுவலகம் கோவை காந்திபுரத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி., சிறப்பு புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் இயங்கி வருகிறது.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:

திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம் என மேற்கு மண்டலத்தில் உள்ள 8 மாவட்டங்களில் நடைபெறும் பயங்கரவாதம் தொடர்பான வழக்குகள் இங்கு விசாரிக்கப்படும். மேலும் சட்ட விரோத செயல்கள் தடுப்பு சட்டம் (உபா), ஆயுத தடை சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகள் விசாரிக்கப்படும்.

இந்த பயங்கரவாத தடுப்பு பிரிவானது விரைவில் 90 போலீசாருடன் இயங்கும். இந்த பிரிவுக்கு விரைவில் தனி கட்டடம் கட்டப்பட உள்ளது. அதற்காக, 3 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இதில் ஏதாவது ஒரு இடம் விரைவில் இறுதி செய்யப்பட்டு கட்டடம் கட்டப்படும். இந்த பயங்கரவாத தடுப்பு பிரிவில் அனைத்து வகையான ஆயுதங்களை கையாள தெரிந்த தாக்குதல் குழு, உளவு தகவல்களை சேகரிக்கும் குழு உள்ளிட்ட குழுக்கள் இடம்பெற்றிருக்கும். எங்களது உளவு பிரிவினர் பல்வேறு தடை செய்யப்பட்ட அமைப்புகளின் ஆதரவாளர்களின் விபரங்களை கொண்ட தரவு தளத்தை உருவாக்குவார்கள். 
பிற மாநிலத்தில் உள்ள உளவு பிரிவினருடன் இந்த தகவல்கள் ஒருங்கிணைக்கப்படும்.

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe