தென்னை மகசூல் அதிகரிப்பு பற்றி விவசாயிகளுக்கு விழிப்புணர்வு கூட்டம்...

published 1 year ago

தென்னை மகசூல் அதிகரிப்பு பற்றி விவசாயிகளுக்கு விழிப்புணர்வு கூட்டம்...

கோவை: கோவை அமிர்தா வேளாண் கல்லூரி சார்பில் தென்னை மகசூல் அதிகரிப்பு பற்றி விவசாயிகளுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் பரிந்துரைக்கும் தென்னை டானிக் மற்றும் தேனி வளர்ப்பின் பலதரப்பட்ட நன்மைகள் பற்றி அமிர்தா வேளாண் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கோவை அரசம்பாளையத்தில் உள்ள அமிர்தா வேளாண்மை கல்லூரியில் பயிலும் நான்காம் ஆண்டு மாணவர்கள், ஊரக வேளாண்மை பணி அனுபவத் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு தென்னை மகசூலை அதிகப்படுத்துவதை பற்றியும் பூச்சிகளின் மேலாண்மை பற்றியும் விழிப்புணர்வு கூட்டம் நடத்தினர். இதில்  சொக்கனூர் மற்றும் பொட்டையாண்டிபுரம்பு கிராமத்தை சேர்ந்த பல தென்னை விவசாயிகள் கலந்து கொண்டனர்.

தென்னை டானிக் பயன்பாடு குறித்தும் அதன் நன்மைகள் குறித்தும் விவசாயிகளுக்கு அமிர்தா வேளாண் மாணவர்கள் எடுத்துரைத்தனர். சுற்றுச்சூழல் மற்றும் மண்வள பாதுகாப்பை கருத்தில் கொண்டு, மாணவர்கள் தென்னை பூச்சிகளை இயற்கை முறையில் கட்டுப்படுத்துவது  பின்பு தேனி வளர்ப்பின் பலதரப்பட்ட நன்மைகள் பற்றியும் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர். இந்த நிகழ்வானது அமிர்தா வேளாண்மை கல்லூரியின் முதல்வர் முனைவர்  சுதீஷ் மணாலில் வழிகாட்டுதல் படி நடத்தப்பட்டது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe