கோவையில் வியாபாரி இல்லத்தில் மூன்று பேரை கட்டிப்போட்டு கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம்- மேலும் மூன்று பேர் கைது...

published 1 year ago

கோவையில் வியாபாரி இல்லத்தில் மூன்று பேரை கட்டிப்போட்டு கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம்- மேலும் மூன்று பேர் கைது...

கோவை: கோவையில் வியாபாரி வீட்டில் 3 பேரை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளையடித்த வழக்கில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
 

குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் கமலேஷ் மோடி (52). மொத்த பருத்தி வியாபாரி. இவர் கோவை ஆர்.எஸ்.புரம் மேற்கு ஆரோக்கியசாமி வீதியில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். கடந்த மாதம் 25ம் தேதி வீட்டில் மனைவி ரூபல் (49), மகன் மிகர் (24) மற்றும் வேலைக்கார பெண்கள் இருந்தனர். கமலேஷ் மோடி தைப்பூச விழாவிற்காக மருதமலை சென்றிருந்தார். இந்நிலையில், மதியம் வீட்டிற்குள் புகுந்த கொள்ளை கும்பல் வீட்டில் இருந்த 3 பேரை கட்டிப்போட்டு 36 பவுன் நகை மற்றும் ரூ.13 லட்சத்தை கொள்ளையடித்து தப்பி சென்றனர். ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. 

இது தொடர்பாக போலீஸ் துணை கமிஷனர் சரவணக்குமார், உதவி கமிஷனர் ரவிக்குமார் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையர்களை தேடி வந்தனர்.இதில், ஏற்கனவே கோவை பட்டணம் பகுதியை சேர்ந்த சூர்யபிரகாஷ் (31), பூபதி (31), ஜூலியட் (39), தமிழரசன் (32) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் ரூ.3.5 லட்சம், 11.5 பவுன் நகை மீட்கப்பட்டது. மேலும் 12 பேரை போலீசார் தேடி வந்தனர்.
 

இதில் நேற்று திருச்சி மாவட்டம் பொன்மலையை சேர்ந்த பிரவீன் (எ) பாம்பு பிரவீன் (30), சண்டியர் (எ) அஜித் (26), திருவாரூரை சேர்ந்த பிரகாஷ் (34) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 27 பவுன் நகை, ரூ.1.80 லட்சம் மீட்கப்பட்டது. மேலும் தலைமறைவாக உள்ள 9 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe