கோவை மாநகர காவல்துறையினருக்கு ரோந்து பணிகளுக்காக எலக்ட்ரிக் வாகனங்கள்...

published 1 year ago

கோவை மாநகர காவல்துறையினருக்கு ரோந்து பணிகளுக்காக எலக்ட்ரிக் வாகனங்கள்...

கோவை: கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் ரோந்து பணிகளுக்காக எலக்ட்ரிக் ஆட்டோக்கள் தனியார் நிறுவனத்தின் சி.எஸ்.ஆர் நிதியிலிருந்து கொடுக்கப்பட்டுள்ளது. இதனை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.

இந்த எலக்ட்ரிக் ஆட்டோவில் சைரன் கேமரா வசதிகள் உள்ளது. மேலும் இதில் ஆறு பேர் அமர்ந்து செல்லலாம். இதனை மாநகரில் நெரிசல் நிறைந்த பகுதிகளில்  பயன்படுத்த இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 
முதல்கட்டமாக 5 ஆட்டோக்கள் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில்  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாநகர காவல் ஆணையர்,  ரோந்து பணிகளுக்காக 5 எலக்ட்ரானிக் ஆட்டோகளை தனியார் நிறுவனங்கள் அர்ப்பணித்துள்ளதாகவும் முதல் கட்டமாக இந்த ஐந்து ஆட்டோக்களை காவல் நிலையங்களுக்கு ஒப்படைக்கப்பட்டு ரோந்து பணியை தீவிர படுத்த உள்ளதாக தெரிவித்தார். இதில் பல்வேறு வசதிகள் இருப்பதாகவும் காவல்துறைக்கு பயன்படும் வகையில் இருக்கும் எனவும் கூறினார். 

இவற்றை வடவள்ளி, கரும்புக்கடை உள்ளிட்ட காவல் நிலையங்களுக்கு அனுப்ப இருப்பதாகவும் காவலர்கள் எளிதில் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.  ஆட்டோவிலிருந்து பொதுமக்களிடம் பேசுவதற்கும்  வசதி செய்யப்பட்டுள்ளதாக கூறிய அவர்  குறுகலான பாதைகளில் சென்று பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் ஸ்ரீ மகா சக்தி ஆட்டோ ஏஜென்சி 
தன்னார்வ தொண்டு அமைப்பினர் உடனிருந்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe