ஊட்டியில் வரி செலுத்தாமல் சிறை பிடிக்கப்பட்ட வாகனங்கள் பொது ஏலம்

published 2 years ago

ஊட்டியில் வரி செலுத்தாமல் சிறை பிடிக்கப்பட்ட வாகனங்கள் பொது ஏலம்

 நீலகிரி: ஊட்டியில் வரி செலுத்தாமல் சிறை பிடிக்கப்பட்ட வாகனங்கள் பொது ஏலம் விடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஊட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

போக்குவரத்து துறையில் வரி செலுத்தாத மற்றும் இதர குற்றங்களுக்காக பல்வேறு போக்குவரத்து அலுவலர்களால் சிறை பிடிக்கப்பட்டு வாகன உரிமையாளர்களால் உரிமை கோரப்படாமலும் மற்றும் நிதியாளர்களல் விடுவிக்கப்படாமலும் நீண்டகாலமாக ஊட்டி வட்டார போக்குவரத்து அலுவலகம் 23 மற்றும் கூடலூர் பகுதி அலுவலகத்தில் 9 என மொத்தம் 32 வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

அந்த வாகனங்கள் அனைத்தும் தற்போது இயக்க இயலாத நிலையிலும் மற்றும் துருப்பிடித்த நிலையிலும் உள்ளது. அவற்றை பொது ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஏலத்தில் கலந்து கொள்ள விரும்புவோர் 11&ம்ந் தேதி முதல் ஊட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ரூ.500 செலுத்தி ஒப்பந்தப்புள்ளி விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளலாம். 
வரும் 19ம் தேதி மதியம் 12 மணி வரை ஒப்பந்தப் புள்ளி விண்ணப்பங்கள் வழங்கப்படும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 20ம் தேதி காலை 10 மணிக்குள் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். முன்பணம் ரூ.10 ஆயிரம் வங்கி வரைவோலை செலுத்துபவர்கள் மற்றும் நடப்பு புளுவு கணக்கு வைத்திருப்பவர்கள் மட்டுமே ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

தொடர்ந்து வரும் 20ம் தேதி காலை 11 மணிக்கு ஊட்டி-வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பொது ஏலம் விடப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe