கோவையில் 10, +1, +2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் எத்தனை பேர்? எத்தனை பள்ளிகள்? மையங்கள்?

published 11 months ago

கோவையில் 10, +1, +2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் எத்தனை பேர்? எத்தனை பள்ளிகள்? மையங்கள்?

கோவை:  கோவையில் 10, +1, +2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் விவரங்களை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. 

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 1ம் தேதி முதல் 22ஆம் தேதி வரையும், 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 4ஆம் தேதி தொடங்கி 25ஆம் தேதி வரையும் நடைபெறுகிறது. 

இதேபோல் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 26ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ம் தேதி வரையும் நடைபெற உள்ளது.

கோவையைப் பொறுத்தவரை 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை கோவை மற்றும் பொள்ளாச்சியைச் சேர்ந்த 363 பள்ளிகளைச் சேர்ந்த 33 ஆயிரத்து 659 மாணவர்கள் எழுதுகின்றனர்.

11ஆம் வகுப்பு பொதுத் தேர்வை கோவை மற்றும் பொள்ளாச்சியில் 363 பள்ளிகளைச் சேர்ந்த 35 ஆயிரத்து 975 மாணவர்கள் எழுதுகின்றனர். 

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை கோவை மற்றும் பொள்ளாச்சியில் 523 பள்ளிகளைச் சேர்ந்த 41 ஆயிரத்து 563 மாணவர்கள் எழுதுகின்றனர்.

12ம் வகுப்பு பொதுத் தேர்வுக்காக கோவையில் 89 தேர்வு மையங்களும், பொள்ளாச்சியில் 37 தேர்வு மையங்களும் தயார் செய்யப்பட்டுள்ளன 

11ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு கோவையில் 89 தேர்வு மையங்களும், பொள்ளாச்சியில் 37 தேர்வு மையங்களும் தயார் செய்யப்பட்டுள்ளன. 

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு கோவையில் 107 தேர்வு மையங்களும், பொள்ளாச்சியில் 50 தேர்வு மையங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe