கோவை மக்கள் உயிர் உங்களுக்கு விளையாட்டா போச்சா?

published 11 months ago

கோவை மக்கள் உயிர் உங்களுக்கு விளையாட்டா போச்சா?

கோவை: கோவை மாநகராட்சியில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக பல்வேறு இடங்களில் குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.  பல்வேறு இடங்களில்  பணிகள் நிறைவடைந்து இருந்தாலும் குழிகள் சரிவர மூடப்படாததால் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

 

இந்நிலையில் இன்று காலை கோவை மாநகராட்சி வஉசி பகுதியில் இருந்து காவலர் குடியிருப்புக்கு செல்லும் சாலையில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட குழியில் மாநகராட்சியின் குப்பை சேகரிக்கும் வாகனம் ஒன்று சிக்கியது. அதேசமயம் அந்த வாகனத்தை பின் தொடர்ந்து வந்த தனியார் பள்ளி வாகனமும் குழியில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

பின்னர் டிராக்டர் உதவியுடன் குழியில் சிக்கிய குப்பை சேகரிக்கும் வாகனம் வெளியில் எடுக்கப்பட்டது. பின்னர் பள்ளி வாகனமும் சாமர்த்தியமாக வெளியேற்றப்பட்டுள்ளது.

 

குழிகள் தோண்டப்பட்டு பணிகள் மேற்கொள்ளும் போது தடுப்புகள் அமைக்க வேண்டும் எனவும் அவ்வாறு அமைக்கும் பட்சத்தில் இது போன்ற விபத்துகளை தவிர்க்கலாம் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe