இனி ச.ம.க., என்ற கட்சியே கிடையாது; பா.ஜ.க.,வுடன் இணைத்தார் சரத்குமார்!

published 11 months ago

இனி ச.ம.க., என்ற கட்சியே கிடையாது; பா.ஜ.க.,வுடன் இணைத்தார் சரத்குமார்!

சமத்துவ மக்கள் கட்சியை பா.ஜ.,வுடன் இணைத்தார் சரத்குமார்.

நடிகர் சரத்குமார் ச.ம.க., என்ற கட்சியை கடந்த 2007ம் ஆண்டு தொடங்கி நடத்தி வந்தார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ச.ம.க., பா.ஜ.க., உடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ளும் என்றும் தெரிவித்திருந்தார்.

இதனிடையே இன்று நடைபெற்ற கூட்டத்தில் தனது கட்சியை பா.ஜ.க.,வுடன் இணைத்துள்ளார் சரத்குமார்.

மக்கள் நலனுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் மோடியுடன் இணைந்து செயல்பட்டால் என்ன என தோன்றியதால் நள்ளிரவில் அண்ணாமலை அழைத்து எனது முடிவைக் கூறினேன் என்று சரத்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

சரத்குமாரின் இந்த முடிவால் ஆண்டாண்டு காலமாக கட்சிக்காக உழைத்த நிர்வாகிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர், இந்த இணைப்பு நிகழ்ச்சியிலேயே நிர்வாகி ஒருவர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சரத்குமாரை கடுமையாக திட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது தொடர்ந்து பா.ஜ.க.,வினர் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

இதனிடையே சரத்குமாரை தமிழகத்தில் அடைத்து வைக்க விருப்பமில்லை என்றும் சரத்குமார் தேசியத்திற்கு தேவைப்படுகிறார் என்றும் தமிழ்நாடு பா.ஜ.க., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ச.ம.க., கடந்து வந்த பாதை:

2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக.,வுடன் கூட்டணி, தென்காசி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி

2014 மக்களவைத் தேர்தலில் அதிமுக.,வுக்கு, ஆதரவு போட்டியிடவில்லை.

2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக., கூட்டணியில் ஒரு தொகுதியில் போட்டி

2019 மக்களவைத் தேர்தலில் அதிமுக.,வுக்கு ஆதரவு, போட்டியிடவில்லை

2021 சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மையத்துடன் கூட்டணியில் 37 இடங்களில் போட்டி.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe