இன்று கோவை வருகிறார் ஸ்டாலின்!

published 11 months ago

இன்று கோவை வருகிறார் ஸ்டாலின்!

கோவை: பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விதமாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று கோவை வருகிறார்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை பொள்ளாச்சி, ஆச்சிப்பட்டியில் நடைபெறுகின்ற அரசு விழாவில், பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை துவக்கி வைத்து, ரூ.509 கோடி மதிப்பில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். இன்று காலை 9.30 மணிக்கு கோவை விமான நிலையம் வரும் அவர், காரில் பொள்ளாச்சி செல்கிறார்.

மேலும், முதலமைச்சர் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கூடுதல் கட்டிடங்களை திறந்து வைக்க உள்ளதைத் தொடர்ந்து, காலை 10.30 மணிக்கு கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெறும் நேரலை காணொளி நிகழ்ச்சியில் அமைச்சர் சுப்ரமணியன் கலந்து கொள்கிறார்.

இதற்காக கோவை-பொள்ளாச்சி வழித்தடத்தில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த செய்திக்கு…

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe