👶👧 உங்க வீட்டு சுட்டி குட்டீசுக்கு இதோ ஒரு Colorful lunch recipe! 🍛

published 8 months ago

👶👧 உங்க வீட்டு சுட்டி குட்டீசுக்கு இதோ ஒரு Colorful lunch recipe! 🍛

என்ன தான் கேரட் பார்க்க கலர்ஃபுல்-லா அழகா இருந்தாலும் நம்ம குட்டிஸ காய் சாப்பிட வைக்கிறதே அம்மா அப்பாகளுக்கு ஒரு பெரிய டாஸ்க்-கா இருக்கு… போராட்டம் இல்லாம சுலபமா நம்ம குட்டிசை சாதம் கூட சேர்த்து கேரட் காயையும் சாப்பிட வைக்க ஒரு சூப்பர் ரெசிபி இதோ… 

தினம் தோறும்  சாம்பார், ரசம் சாப்பிட்டு புதுசா ஏதாது சாப்பிட விரும்பும் பெரியோரும் இதை டிரை செய்யலாம்…

தேவையான பொருட்கள்:

# உதிரியான சாதம்: 2 கப்  

# பெரிய கேரட் 3 (துறுவியது)

# பெரிய வெங்காயம்: 2 (பொடியாக நறுக்கியது)

# தக்காளி: 1 (பொடியாக நறுக்கியது)

# மிளகாய்: 3 (பொடியாக நறுக்கியது)

# மஞ்சள் தூள்: சிறிதளவு

# கருவேப்பிலை: சிறிதளவு

# கடுகு, உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு: தாளிப்பதற்கு ஏற்ப

செய்முறை:

# சாதத்தை வடித்து, உதிரியாக தயார் செய்து கொள்ளவும்.

# வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கடுகு, உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு, கருவேப்பிலை போட்டு தாளித்து விடவும்.

# பிறகு மிளகாய், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். 

# பின்னர் தக்காளியையும் சேர்த்து வதக்கவும்.

# அதன் மேல் துருவிய கேரட்டை சேர்த்து 50 மில்லி தண்ணீர் சேர்த்து கிளரி உப்பு சேர்த்து வேக விடவும். 

# சிறிது நேரத்திற்கு பிறகு இறக்கி சாதத்துடன் சேர்த்து கிளரினால் சுவையான கேரட் சாதம் தயார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe