பள்ளிக்கூடத்தில் இறக்கி விடுவதாக பைக்கில் ஏற்றி, கோவையில் மாணவருக்கு தொல்லை!

published 2 weeks ago

பள்ளிக்கூடத்தில் இறக்கி விடுவதாக பைக்கில் ஏற்றி, கோவையில் மாணவருக்கு தொல்லை!

கோவை: கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நேற்று முன்தினம் பள்ளிக்கு செல்வதற்காக ஒன்பதாம் வகுப்பு மாணவர் ஒருவர் நடந்து சென்று கொண்டு இருந்தார்.

அப்போது பைக்கில்  ஹெல்மெட் அணிந்தபடி வந்த வாலிபர் ஒருவர் மாணவனை பள்ளியில் இறக்கி விடுவதாக கூறி உள்ளார். அதை நம்பிய மாணவன் பைக்கில் ஏறி அமர்ந்தார்.

அப்போது அந்த வாலிபர், மாணவனிடம் நைசாக பேச்சு கொடுத்துக் கொண்டே தொடையில் கை வைத்து பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். முதலில் இதனை தவிர்த்த அந்த மாணவன் ஒரு கட்டத்தில் தொல்லை பொறுக்க முடியாமல் பைக்கில் இருந்து குதித்து தப்பி உள்ளார்.

இது குறித்து மாணவர் தனது பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்கள் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe