கோவையில் நாளை முதல் துவங்குகிறது வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள்- எங்கே என்ற முழுவிவரங்கள்...

published 10 months ago

கோவையில் நாளை முதல் துவங்குகிறது வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள்- எங்கே என்ற முழுவிவரங்கள்...

கோவை: எதிர்வரும் பாராளுன்ற மக்களவை பொதுத் தேர்தல் 2024-ஐ முன்னிட்டு, கோயம்புத்தூர் மாவட்டத்தில், 20.கோயம்புத்தூர் பாராளுன்ற தொகுதி மற்றும் 21.பொள்ளாச்சி பாராளுன்ற தொகுதிகளுக்கு 3094 வாக்குச் சாவடிகளில் 19.04.2024 தேர்தல் நடைபெற உள்ளது. 

19.04.2024 அன்று நடைபெறவுள்ள வாக்குப்பதிவினை முன்னிட்டு பத்து தொகுதிகளுக்கும்  பத்து பள்ளி/கல்லூரிகளில் வாக்கு பதிவு அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு நாளை காலை 10:00 மணி முதல் தொடங்கி நடைபெறவுள்ளது.

ஷ்காலர் ஷிப்பில் படிக்க DJ Tuition குழுவில் இணையலாம்...

https://chat.whatsapp.com/KR30D92FDtgHxyrSYs10Ms

இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

111-மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு, நேஷனல் மெட்ரிக்குலேசன் பள்ளியிலும், 116-சூலூர் சட்டமன்ற தொகுதிக்கு, ஆர்.வி.எஸ். கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், 117-கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு, கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், 118-கோயம்புத்தூர் (வடக்கு) சட்டமன்ற தொகுதிக்கு, ஹிந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், 

119-தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு, ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், 120-கோயம்புத்தூர் (தெற்கு) சட்டமன்ற தொகுதிக்கு, நிர்மலா கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், 121-சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு, பி.எஸ்.ஜி. பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியிலும், 122-கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதிக்கு, ஹிந்துஸ்தான் பொறியியல் கல்லூரியிலும், 

123-பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதிக்கும் மற்றும் 124-வால்பாறை (தனி) சட்டமன்ற தொகுதிக்கும், டாக்டர். மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியிலும் பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe