10ம் வகுப்பு பொதுத்தேர்வு- கோவை மாவட்ட ஆட்சியர் ஆய்வு...

published 10 months ago

10ம் வகுப்பு பொதுத்தேர்வு- கோவை மாவட்ட ஆட்சியர் ஆய்வு...

கோவை: தமிழகம் முழுவதும் இன்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியது.  இன்று முதல் ஏப்ரல் மாதம் 8-ம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறுகிறது.

அதன்படி கோவையில் மாணவர்கள் 158 மையங்களில் 40329 மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். இந்நிலையில்  டவுன்ஹால் பிரசன்டேஷன் கான்வென்ட் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மையத்தினை கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி பார்வையிட்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் தேர்வு எழுத தவறிய 10-ம் மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களை கணக்கெடுத்து அவர்களுக்கு என்ன குறைகள் என்று கேட்டறிந்து அவர்களுக்கு தனித் தேர்வு வைக்க ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe