உங்கள் கோரிக்கைகள் டில்லியில் ஒலிக்க உள்ளது- கோவை திமுக வேட்பாளர் பிரச்சாரம்...

published 10 months ago

உங்கள் கோரிக்கைகள்  டில்லியில் ஒலிக்க உள்ளது- கோவை திமுக வேட்பாளர் பிரச்சாரம்...

கோவை: இந்திய கூட்டணியின் கோவை நாடாளுமன்ற தொகுதி திமுக 
வேட்பாளர் கணபதி ராஜ்குமார் கருமத்தம்பட்டி, கணியூர், தென்னம்பாளையம், முத்துக்கவுண்டன்புதூர், ராசிபாளையம், அருகம்பாளையம், மாதம்பூர், தொட்டிபாளையம், குமாரபாளையம், செங்கத்துறை, காடாம்பாடி, காங்கேயம் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உதயசூரியனுக்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர்,
இந்த பகுதி விசைத்தறிகள் நிறைந்த பகுதி, ஒன்றிய அரசின் ஜிஎஸ்டி யால், 60 சதவீதம் விசைத்தறிகள்  மூடப்பட்டுள்ளது. பழைய இரும்பிற்கு விற்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளனர்.  10  ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் ஒன்றிய அரசு எடுக்க வில்லை. எதிர்காலத்தில் நீங்கள் எனக்கு  வாக்களிப்பீர்கள், உங்களது கோரிக்கைகள்  டில்லி வரை ஒலிக்க உள்ளது என கூறினார்.

தொடர்ந்து, தொன்னம்பாளையம் பிரிவில் உள்ள தேநீர் கடையில் டீ குடித்த வேட்பாளர் கணபதி ராஜ்குமார் அங்கிருந்தவர்களிடம் டீ குடித்தவாறே வாக்கு சேகரித்தார். அப்போது அங்கிருந்த பெண் மாதம்தோறும் ரூ ஆயிரம் வங்கி கணக்கில் உரிமைத்தொகை வருவதாகவும், இலவச பேருந்து பயணம் பேருதவியாக இருப்பதாகவும்,  நாங்கள் உதயசூரியனுக்கு தான் வாக்களிக்க உள்ளோம் என்றார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe