சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமி மாணவர்கள் குரூப்-1 தேர்வில் சாதனை

published 10 months ago

சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமி  மாணவர்கள் குரூப்-1 தேர்வில் சாதனை

கோவை: குரூப்-1 தேர்வு முடிவில் சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமி கோவை கிளையில் படித்த மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

அது குறித்து கோவை கிளையின் நிர்வாக தலைவர் அருண் கூறியதாவது:-

மாநில அளவில் 7வது இடம் பிடித்த மாணவி மது அபிநயா மூன்று நிலை பயிற்சிகளையும் கோவை ஷங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமி கிளையில் பயிற்சி பெற்றவர்.

இவர் கடந்த மாதம் குரூப் II தேர்வு முடிவில் சார் பதிவாளர் பதவியையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மாநில அளவில் 15வது இடம் பிடித்த மாணவர் விஜய் மூன்று நிலை பயிற்சிகளையும் கோவை ஷங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமி கிளையில் பயிற்சி பெற்றவர்.

இவர் கடந்த வருடம் குரூப் IV தேர்வு முடிவில் இளநிலை உதவியாளர் பதவியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் எங்கள் அகாடமியில் பயிற்சி பெற்ற மாணவி சுபாஷினி மாநில அளவில் 49வது இடம் பிடித்தார்.

இதன் தொடர்ச்சியாக மேலும் சில மாணவர்கள் இறுதி தர வரிசை பட்டியலுக்காக காத்து இருக்கிறார்கள்.

ஒவ்வொரு முறையில் போட்டித்தேர்வு முடிவுகளில் தனது சாதனையை வெளிக்காட்டி வரும் சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமியின் கோவை கிளை, இம்முறையும் அந்த சாதனை பயணத்தை தொடர்ந்திருக்கிறது.

அந்தவகையில் புதிய வகுப்புகளை நாங்கள் தொடங்க இருக்கிறோம். அதன்படி குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ மற்றும் குரூப்-4 தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளை முன்னெடுக்கிறோம்.

இந்த பயிற்சி வகுப்புகள் நேரடி மற்றும் ஆன்-லைன் மூலமாக பயிற்சிகள் வழங்கப்பட இருக்கிறது. சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமி கோவை கிளையில் படித்த ஏராளமான மாணவர்கள் எங்களது சிறப்பான பயிற்சி மூலமாக மத்திய- மாநில அரசுகளில் உயர் பதவிகளில் பணியாற்று கொண்டு இருக்கிறார்கள்.

நரமான வல்லுனர் குழு மாணவர்களை வழிநடத்த தயாராக இருக்கிறது.

எனவே அரசு அதிகாரிகள் ஆவது என்ற லட்சியத்துடன் இருக்கும் தன்னம்பிக்கை மிக்க மாணவர்கள் உடனடியாக எங்களை அணுகி உங்கள் வாழ்க்கையை பிரகாசப்படுத்தி கொள்ளுங்கள், என சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமி (கோவை கிளை) நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர். 
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe