கிரேனில் மாலை, ஆப்பிள் மாலை, இளநீர் கொடுத்து கோவையில் அண்ணாமலையை வரவேற்ற பாஜகவினர்...

published 10 months ago

கிரேனில் மாலை, ஆப்பிள் மாலை, இளநீர் கொடுத்து கோவையில் அண்ணாமலையை வரவேற்ற பாஜகவினர்...

கோவை: கோவை பாராளுமன்ற பாஜக வேட்பாளர் அண்ணாமலை கோவையில் பல்வேறு இடங்களில் தொடர் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார்.அதே போல அண்ணாமலைக்கு ஆதரவாக பாஜக தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இதன் தொடர்ச்சியாக இன்று காலை டவுன்ஹால் பகுதியில் பிரச்சாரத்தை மேற்கொண்டனர். 

 

பிரச்சாரத்தில் மக்கள் மத்தியில் பேசிய,வானதி சீனிவாசன்,

நம்முடைய தொகுதி இந்தியாவிலேயே கவர்ச்சிக்கு  மயங்காத தொகுதி. பாரதிய ஜனதா கட்சிக்கு எங்களுடைய வாக்கு என்பதும் , கோவையின் உடைய வளர்ச்சிக்கான வாக்கு என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கக்கூடிய தொகுதி நம்முடையது.தாமரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கு,  நாம் அத்தனை பேரும் கடுமையாக உழைக்க வேண்டும்.

பாரதிய ஜனதா கட்சியினுடைய வேட்பாளர் என்பவர் கோவையின் உடைய வருங்கால வளர்ச்சிக்காக பிரதமர் மோடி  கொடுத்துள்ளார்.மூன்றாவது முறையாக பதவியேற்கின்ற பொழுது நம்முடைய ஊரின் உடைய பிரதிநிதியாக நாம் தேர்ந்தெடுத்து அனுப்ப வேண்டும். அவர் பிரதமர் மோடி திட்டங்களை கொண்டு வந்து சேர்க்கக்க வேண்டும்.

கடந்த காலங்களில் பார்த்திருக்கிறோம் 2014ல் 2019 லே நாம் அத்தனை பேரும் கடுமையான உழைப்பை கொடுத்தும் கூட பிரதமர் மோடி அவர்களுக்கு கோவையின் உடைய எம்பியை நம்மால் கொடுக்க முடியவில்லை.

மக்கள் தீர்மானமாக இருக்கிறார்கள் கோயமுத்தூர் என்றால் அது அண்ணாமலைக்கு என்றம், அவர்களுடைய வாக்கு என தீர்மானமாக இருக்கிறார்கள். மீண்டும் மூன்றாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி  தான் ஆட்சி அமைக்க போகிறார். இதில் எந்த மாற்றமும் இல்லை.

நடக்க இருப்பது மாநிலத்திற்கான தேர்தல் அல்ல,  நடக்க இருப்பது உள்ளாட்சிக்கான தேர்தல் அல்ல,  ஏப்ரல் 19ஆம் தேதி நாம் அத்தனை பேரும் மட்டுமல்ல , நம்மைச் சுற்றி இருப்பவர்கள் நம்மை குடும்பத்தினர் உறவினர்கள் அத்தனை பேரையும் அழைத்துச் சென்று நாம் வாக்களிக்க வேண்டிய சின்னம் தாமரை சின்னம்.

வாக்கு பெட்டியில் நமக்கு எந்த எண்! இப்பவே பாருங்க! நாம ஒன்னாம் நம்பர் இடத்துல இருக்கிறோம். இந்த ஒன்னாம் நம்பர் இடத்தை நாம் ஜூன் நான்காம் தேதி வெற்றி பெறுகின்ற பொழுது அதை உறுதி செய்ய வேண்டும்.

ஒவ்வொரு வீட்டைக்கும் செல்வோம் ஒவ்வொரு நபருக்கும் செல்வோம் பத்தாண்டுகளாக சிறப்பாக ஆட்சி நடத்துகின்ற பிரதமர் மோடி அவர்களுடைய கரத்தை வலுப்படுத்த கோவையிலிருந்து நம் அன்பு சகோதரர் அண்ணாமலை  தேர்ந்தெடுப்போம். அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.கோவை பாஜகவின் அசைக்க முடியாத கோட்டை என்பதை நாம் மீண்டும் நிரூபிக்க வேண்டும்.  லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் தாமரை சின்னத்தை வெற்றி பெற செய்து  அண்ணாமலை வெற்றி பெறச் செய்வோம் என தெரிவித்தார்.

 

இதனைத் தொடர்ந்து மக்கள் மத்தியில் பேசிய அண்ணாமலை,

கோவை தெற்கு தொகுதி மக்களை பொருத்தவரை நேர்மையின் பக்கம் நிற்போம் என்பார்கள்.வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி எப்படி நம்முடைய கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில் தாமரை மலர்ந்ததோ !! அதேபோல நம்முடைய கோயம்புத்தூர் பாராளுமன்றத்தினுடைய எல்லா மக்களும் தாமரை மலர செய்வார்கள் என நம்புகிறேன்.

பாஜகவிற்கு பதிவு செய்யக்கூடிய வாக்கு சதவீதத்தை அதிகளவில் இங்கு கொடுப்பீர்கள்  என்ற முழு நம்பிக்கை எனக்கு இருக்கிறது.நாம் இருக்க கூடிய பகுதி மிக முக்கியமான பகுதி,  காரணம் இந்தியாவினுடைய மிக முக்கியமான நம்முடைய எல்லா தொழிலும் கூட நடக்கின்ற பகுதி.

நகை தொழிலாளராக இருக்கட்டும், அந்த நகை சம்பந்தப்பட்ட எல்லா நுணுக்கமான வேலைகளாக நடக்கும் இடம்.இந்த பகுதியை தென்னிந்தியாவினுடைய மேன்செஸ்டர் என்று சொல்லுவோம்.  அப்படிப்பட்ட அற்புதமான இடத்தில் நின்று கொண்டிருக்கின்றோம்

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அனுதினமும் கூட மக்களை எப்படி மேம்படுத்த வேண்டும் முன்னேற்ற வேண்டும் என்பதற்காக திட்டங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார்.மூன்றாவது முறை பிரதமர்400 பாராளுமன்ற உறுப்பினர்களை தாண்டி வருவார்.

பாராளுமன்ற தேர்தலுக்கு வாக்கு சேகரிப்பது நம்முடைய அக்கா வானதி சீனிவாசன் அவர்கள் சட்டமன்ற உறுப்பினராக செய்திருக்கக்கூடிய பணியை உங்கள் முன்னால் வைத்தே நாங்கள் வாக்கு கேட்கின்றோம்.

மற்றவர்களைப் போல் இதை செய்வோம் அதை செய்வோம் என்று சொல்வதை விட இது செய்து இருக்கின்றோம். இன்னும் அதிகமாக செய்வதற்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று தான் கோயம்புத்தூர் தெற்கு தொகுதியினுடைய மக்களிடையே வேண்டுகோள் விடுகின்றோம் .

நம்முடைய சட்டமன்ற உறுப்பினர் அவருடைய தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மட்டுமே 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நம்முடைய குறிஞ்சி கார்டன் பகுதியில தார் சாலை அமைத்து கொடுத்து இருக்கார்.சாவித்திரி நகர் பகுதியில் இளைஞர்களுக்கும் 30 லட்சம் ரூபாயில் ஜிம் அமைத்து கொடுத்திருக்கின்றார்.

மிக முக்கியமாக எனக்கு மிகவும் பிடித்த ஒரு திட்டம் எல்லா இடத்திலும் கூட குழந்தைகளை தத்தெடுத்து மோடியின் குழந்தை அப்படின்னு நாம் அவருடைய படிப்பு எல்லாம் பார்த்துக் கொள்கின்றோம். இந்த பகுதியில் மட்டுமே 11 குழந்தைகளை மோடியின் குழந்தைகளாக நம்முடைய எம்எல்ஏ தேர்ந்தெடுத்து உதவி செய்து வருகிறார்.ஸ்மார்ட் சிட்டி  திட்டத்தை முழுமையாக செயல்படுத்துவதற்கு முயற்சி எடுத்து வருகிறார். அதையும் மக்களும் பார்த்துக் கொண்டிருக்கின்றீர்கள்.

சட்டமன்ற உறுப்பினர்கள் செய்திருக்கக்கூடிய சாதனைகள்ல சில துளிகள் தான்.சட்டமன்ற உறுப்பினர் இருக்கும் பொழுது சிறிய பணிகள் இங்கே நடக்கிறது.  நாங்கள் உங்களுக்கு வாக்குறுதி கொடுக்கிறோம்.

மிக முக்கியமாக நகை உற்பத்தியில் யாரெல்லாம் இருக்கிறீர்களோ!  கோவையை ஒரு சிறப்பு பொருளாதார மண்டலமாக நகை உற்பத்தியை பொறுத்தவரை கொண்டு வருவதற்கான எல்லா முயற்சியும் எடுப்போம்.

எல்லா தொழிலாளர்களுக்கும் நிறுவனங்களுக்கும் கூட இந்த நேரத்திலே நாங்கள் சொல்லிக் கொள்கின்றோம்.நம்முடைய தேர்தல் அறிக்கையிலும் கூட இருக்கும்.ஒரு சிறப்பு பொருளாதார மண்டலமாக கோவையை அறிவிக்க வேண்டும் என்பது தான் என தெரிவித்தார்.

பிரச்சாரத்தின் போது செல்வபுரம் பகுதியில் அண்ணாமலை க்கு கிரேன் மூலம் பாஜகவினர் பிரம்மாண்ட மாலையை அணிவித்தனர், பின்னர் தேர்முட்டி பகுதயில் பாஜவினர் அண்ணாமலைக்கும் வானதி சீனிவாசனுக்கும் ஆப்பிள் மாலை அணிவித்தும், இளநீர் கொடுத்தும் வரவேற்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe