ஓ.டி.டி., ரிலீஸ் ஆகிறது லால் சலாம்.. தேதி அறிவிப்பு!

published 10 months ago

ஓ.டி.டி., ரிலீஸ் ஆகிறது லால் சலாம்.. தேதி அறிவிப்பு!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால்  நடிப்பில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைபில்  லால் சலாம் படம் கடந்த பிப்ரவரி மாதம் பெரும் எதிர்பார்ப்போடு வெளியாகி இருந்தது.

இந்த படத்தில்  மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில்  ரஜினி நடித்திருந்தார். ஐஸ்வர்யா ‘3’, 'வை ராஜா வை' ஆகிய திரைப்படங்களை இயக்கி கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் கழித்து இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.

கிரிக்கெட்டையும், மத பிரச்னையையும் மையமாக வைத்து உருவாகியிருக்கிறது லால் சலாம்.
மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனால் படத்திற்கு போட்ட பட்ஜெட்டை கூட  எடுக்க முடியவில்லை. இதனால்  லைக்கா நிறுவனம்  நஷ்டத்தை சந்தித்தது.

தியேட்டரிலேயே இந்த படம் பெரிய அளவில் ஓடாத காரணத்தினால் ஓ.டி.டி., நிறுவனங்கள் படத்தை வாங்க தயக்கம் காட்டினர். இந்த நிலையில் லால் சலாம் படம் எந்த ஓ.டி.டி.,யில் ரிலீஸாகும் என்பது குறித்த வெளியாகியிருக்கிறது.

தற்போது சன் நெக்ஸ்ட் லால் சலாம் படத்தின் ஓ.டி.டி., உரிமையை வாங்கி உள்ளது. ஓடிடி தளத்தில் ஏப்ரல் 15ம்  தேதி லால் சலாம் வெளியாகிறது. மேலும் சன் டிவியிலும் இந்தப் படம் தமிழ் புத்தாண்டுக்கு வெளியாக உள்ளது.

 

பிரேமலு ஓ.டி.டி., ரிலீஸ் எப்போது? வெளியான சூப்பர் அறிவிப்பு!

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe