அண்ணாமலையின் வேட்புமனு விவகாரம்- தேர்தல் அலுவலர் நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் அறிக்கை...

published 10 months ago

அண்ணாமலையின் வேட்புமனு விவகாரம்- தேர்தல் அலுவலர் நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் அறிக்கை...

கோவை: நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு கோவையில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் 28ம் தேதி பரிசீலனை செய்யப்பட்டது. அப்போது பாஜக வேட்பாளராக போட்டியிடும் அண்ணாமலையின் வேட்பு மனு முறைப்படி தாக்கல் செய்யவில்லை எனவும் அதனை நிராகரிக்க வேண்டும் எனவும் கூறி அதிமுக நாம் தமிழர் இதர கட்சியினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் வலியுறுத்தினர்.

பின்னர் அண்ணாமலை நீதிமன்றங்களுக்கு மட்டுமே பயன்படுத்தக்கூடிய முத்திரைத்தாளில் வேட்பு மனு தாக்கல் செய்திருப்பதாக சர்ச்சை ஒன்று எழுந்தது. அன்றைய தினமே கோவை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான கிராந்திகுமார் பாடி யிடம் அதிமுக வழக்கறிஞர்கள், நாம் தமிழர் மற்றும் ஹிந்துஸ்தான் ஜனதா கட்சி வேட்பாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் புகார் அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து அன்றைய தினமே மாவட்ட நிர்வாகம் புதிய வேட்பு மனுவை பதிவேற்றம் செய்திருப்பதாகவும் குற்றம் சாட்டினர். மேலும் இது குறித்து நீதிமன்றத்தை நாட இருப்பதாகவும் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் ஹிந்துஸ்தான் ஜனதா கட்சி வேட்பாளர் ராகுல் காந்தி இது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழக தேர்தல் ஆணையம் மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை அனுப்பியுள்ளது.

இது குறித்து ராகுல் காந்தி கூறுகையில், வேட்புமனு பரிசீலனையின் போது ஒருதலைப்பட்சமாக தேர்தல் நடத்தும் அலுவலர் செயல்பட்டார் எனவும் அதனை தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையம், தமிழக தேர்தல் ஆணையத்திற்கும் இது குறித்து புகார் மனு அனுப்பினோம். இது தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்க கோரி தமிழக தேர்தல் ஆணையம் மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை அனுப்பி உள்ளனர் என்றார்.

இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் கோவையில் மாவட்ட ஆட்சியரும், தேர்தல்  நடத்தும் அலுவலரும் ஒருவரே தான். இப்படியிருக்கையில் எப்படி அவருக்கு அவரே நடவடிக்கை எடுப்பார்? என்ற கேள்வி எழுகிறது. இருப்பினும் இது குறித்து முழு விவரங்கள் அளிப்பதாக மாவட்ட ஆட்சியர் தகவல் அளித்துள்ளார். கண்டிப்பாக நீதிமன்றம் வாயிலாக தீர்வு வாங்கி தருவோம் என கூறினார். அண்ணாமலை form 26ல் விதிமுறைகளை மீறியுள்ளார். 52 இடங்களை அவர் குறிப்பிடாமல் court fee பத்திரத்தில் அளித்துள்ளார். இருப்பினும் பாஜக அரசிற்கும், அண்ணாமலைக்கும் சாதகமாகவே கோவை தேர்தல் அலுவலர் செயல்பட்டு வருகிறார். நீதிமன்றம் மூலம் இதற்கு ஒரு தீர்வு காண்டே தீருவோம், அவர் வேட்பாளர் இல்லை என்ற அறிவிப்பையும் வாங்கி தருவேன் என்றார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe