நடிகர் விஜயை வைத்து படம் எடுக்கப் போகிறாரா மணிகண்டன்? வெளியான சூப்பர் அப்டேட்!

published 10 months ago

நடிகர்  விஜயை வைத்து படம் எடுக்கப் போகிறாரா மணிகண்டன்? வெளியான சூப்பர் அப்டேட்!

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர்  விஜய் நடிக்கும் கோட் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.  விஜய்யின் கடைசிப் படமான 'தளபதி 69' இயக்குநர் பற்றிய எதிர்பார்ப்பும்  அதிகரித்து வரும் நிலையில், குட் நைட், லவ்வர்  பட நடிகர் மணிகண்டன் விஜயிடம்  கதை சொன்னதாக  தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி அரசியலில் களம் இறங்கியுள்ளார். 2026ம் ஆண்டு வரும் சட்டமன்ற தேர்தலில் களமிறங்க இருப்பதாகவும் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சினிமாவில் இருந்து விலகுவதாகவும் அவர்  தெரிவித்துள்ளார்.

வெட்கட்பிரபு இயக்கும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் விஜய் ஹீரோவாக நடித்து வருகிறார்.  ஆகஸ்ட் அல்லது அக்டோபர் மாதம் இப்படம்  வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தை தொடர்ந்து விஜய் 'தளபதி 69' படத்தில் நடிக்க உள்ளார்.  இது அவரது கடைசி  படம் என்பதால்,  படத்தை இயக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு  எழுந்துள்ளது.

இந்த நிலையில் ஜெய் பீம், குட் நைட், லவ்வர்  படத்தின் மூலம் பிரபலமான நடிகர் மணிகண்டன், விஜயிடம்  கதை கூறியதாக  கூறப்படுகிறது. கதையை கேட்ட விஜய், இந்த படத்தில்  இளம் நடிகர்கள் யாராவது நடித்தால் நன்றாக இருக்கும் என கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  

இதனால், மணிகண்டன் இந்த கதையில் தானே நடிக்கலாம் என முடிவு செய்துள்ளாராம். விரைவில் இதுபற்றிய அறிவிப்புகள் வெளியாகும் என தெரிகிறது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe