நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதி விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் மனு!

published 10 months ago

நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதி விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் மனு!

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் பரஸ்பர  விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இருவீட்டார் சம்மதத்துடன், தனுஷ்-ஐஸ்வர்யா திருமணம் கடந்த 2004-ம் ஆண்டு நவம்பர் 18ம் தேதி சென்னையில் நடந்தது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

சுமார் 20 ஆண்டுகள் திருமண வாழ்வுக்குப் பின்னர், கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த சில ஆண்டுகளாக இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். கடந்த 2022-ம் ஆண்டு இருவரும் ட்விட்டரில் தாங்கள் பிரிந்து விட்டதாக பதிவிட்டனர்.

தனுஷ் மற்றும் ஜஸ்வர்யா இடையே உள்ள பிரச்சினையை தீர்க்க அவர்களது  குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் ஈடுபட்ட நிலையில், இருவரும் விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, ஐஸ்வர்யா, லால் சலாம் என்ற படத்தை இயக்கினார். அதே, போல தனுஷூம் அடுத்தடுத்த படத்தில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார். தனுஷ், ஐஸ்வர்யா இருவருமே கிடைக்கும் நேரத்தில் தனது இரு மகன்களுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழித்து வந்தனர்.

இந்த நிலையில் இருவரும் தங்களுடைய திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் வகையில் பரஸ்பர விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அதில் 2004-ம் ஆண்டு நடைபெற்ற தங்களது  திருமணத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.  விரைவில் இந்த மனு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe