தேர்தல் நாளில் தமிழகத்தில் வெப்ப அலை வீசும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

published 2 weeks ago

தேர்தல் நாளில் தமிழகத்தில் வெப்ப அலை வீசும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :

https://chat.whatsapp.com/GKcHrWOaZYqGX1TFQywYIz

கோவை: தமிழகத்தில் நாளை, நாளை மறுநாள் வெப்ப அலை வீசும் என்றும், வெப்ப நிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:


தமிழகத்தில் அடுத்த 3 நாட்களில் வெப்ப நிலை 2 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் படிப்படியாக அதிகரிக்கும். வட தமிழகத்தில் உள் மாவட்டங்களில் 3-5 டிகிரி வரை அதிகரிக்கக்கூடும்.

ஏப்ரல் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.


தென் தமிழகம், வட தமிழகத்தின் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


தேர்தல் நாளில் தமிழகத்தில் வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் தகுந்த முன்னேற்பாடுகளுடன் வாக்குச்சாவடி மையங்களுக்குச் செல்லுங்கள்.

குடை, தண்ணீர் எடுத்துச் செல்லலாம். வெயிலில் செல்வதால் தளர்வான ஆடைகளை அணிந்து செல்லலாம். அடர் நிற ஆடைகளை தவிர்ப்பது நல்லது.





சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube பக்கம் :

https://www.youtube.com/channel/UCA50-DWYW32M1LWiEGmDoFw