கண்ணைப் பறித்த நயன்தாரா வாட்ச்... இத்தனை லட்சமா!

published 2 weeks ago

கண்ணைப் பறித்த நயன்தாரா வாட்ச்... இத்தனை லட்சமா!

நடிகை நயன்தாரா, தனது கணவர் இயக்குனர்  விக்னேஷ் சிவனுடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

40 வயதை நெருங்க உள்ள நடிகை நயன்தாரா, லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.  





தமிழ் திரையுலக செலிப்ரிட்டி ஜோடிக்களுள் மிகவும் பிரபலமானவர்கள் நயன்-விக்னேஷ் சிவன் ஜோடி. சுமார் 5 வருடங்களுக்கும் மேலாக, காதலித்து பின்னர் திருமண வாழ்க்கைக்குள் நுழைந்தனர். 2022 ஆண்டு இவர்களுக்கு  இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தனர். இந்த குழந்தைகளின் பெயர், உயிர் மற்றும் உலக்.  




நடிகை நயன்தாரா தனது சொந்த தொழில், விளம்பரங்கள், போட்டோ ஷுட்கள் எனவும் பணியாற்றி வருகிறார். கணவர் விக்னேஷ் சிவனுடன்  சேர்ந்து  பல்வேறு தொழில் நிறுவனங்களையும் நடத்தி வருகிறார்.    





நயன்தாரா, சில மாதங்களுக்கு முன்புதான் இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வ கணக்கை தொடங்கினார். இதையடுத்து தனது கணவர் மற்றும் குழந்தைகளின் புகைப்படங்களை அடிக்கடி பதிவிடுவார். மேலும் அடிக்கடி போட்டோ ஷூட் செய்வது வழக்கம். 

பிரபல இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா சங்கரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகை நயன்தாரா கணவர் விக்னேஷ் சிவனுடன் கலந்துகொண்டார். அதன்பின்னர் அவர்கள் எடுத்துக்கொண்ட போட்டோ ஷூட் வைரலாகி வருகிறது.  





அதன்படி தற்போது நயன்தாரா கணவர் விக்னேஷ் சிவனுடன் எடுத்துக்கொண்ட போட்டோக்களை பகிர்ந்துள்ளார். இது சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் நயன்தாரா லாவெண்டர் கலர் புடவையிலும்,  விக்னேஷ் சிவன் வேஷ்டி சட்டையிலும்  கேமராவுக்கு சூப்பராக போஸ் கொடுத்துள்ளனர். 




அதில், நயன் அணிந்திருந்த ஆடம்பர வாட்ச் அனைவரையும் கவர்ந்துள்ளது. அவர்  அணிந்திருந்த  வாட்ச் ரோலக்ஸ் ஆய்ஸ்டர் பெர்பெச்சுவல் 36 (Rolex Oyster Perpetual). பிங்க் நிற டயல் மற்றும் சிப்பி பிரேஸ்லெட் கொண்டது. Oystersteel என்ற உலோகத்தில் தயாரிக்கப்பட்ட இந்த வாட்ச் எப்போதும் மினுமினுப்புடன்  இருக்கும். இதன்  விலை ரூ.5.30 லட்சம் என கூறப்படுகிறது. நயன்தாரா அணிந்திருந்த விலை உயர்ந்த ரோலக்ஸ் வாட்ச் வைரலாகப் பரவி வருகிறது.





சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube பக்கம் :

https://www.youtube.com/channel/UCA50-DWYW32M1LWiEGmDoFw