கோவையில் கஞ்சா கேட்டு ஒன்றும் அறியாத மாணவர்கள் மீது தாக்குதல்...

published 10 months ago

கோவையில் கஞ்சா கேட்டு ஒன்றும் அறியாத மாணவர்கள் மீது தாக்குதல்...

கோவை: தூத்துக்குடி மாவட்டம் சிதம்பரம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஆனந்த் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரைச் சேர்ந்த அருண்குமார் கோவை மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகின்றனர். 

தேர்தல் நேரத்தில் கல்லூரி விடுதி விடுமுறை என்பதால் மாச்சேகவுண்டன் பாளையம் பகுதியில் உள்ள அவரது நண்பரான ராஜகுரு என்பவரின் வாடகை அறையில் கடந்த 18 ஆம் தேதி முதல் தங்கி உள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு அந்த அறைக்கு அடையாளம் தெரியாத சுமார் 20 வயது மதிப்புடைய நான்கு நபர்கள் வந்து கஞ்சா கேட்டு உள்ளனர். 

அப்பொழுது அருண்குமார் தாங்கள் இந்த அறைக்கு வந்து இரண்டு நாட்கள் தான் ஆகிறது என்றும் கூறி உள்ளனர். அப்பொழுது இது தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அருண்குமாரை அடையாளம் தெரியாத நான்கு நபர்கள் அங்கு இருந்த கிரிக்கெட் மட்டையால் தலையில் தாக்கி உள்ளனர்.  அப்பொழுது அருகில் இருந்த ஆனந்த் மற்றும் ராஜகுரு ஆகிய இருவரும் அங்கு இருந்து தப்பிச் சென்று உள்ளனர். 

அடையாளம் தெரியாத நான்கு நபர்கள் அறையை விட்டு சென்றதும் ஆனந்த, ராஜ்குரு ஆகிய இருவரும் அறைக்கு சென்று பார்த்த பொழுது அருண்குமார் பின் தலையில் ரத்தக் காயத்துடன் மயங்கிய நிலையில் இருந்து உள்ளார். அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்ந்தனர். 

மேல் சிகிச்சைக்காக கே.ஜி தனியார் மருத்துவமனையில் உள்ள நோயாளியாக அனுமதிக்கப்பட்டு உள்ளார். மேற்படி சம்பவம் தொடர்பாக ஆனந்த் என்பவரிடம் புகார் பெற்று மதுக்கரை காவல் நிலையம் வழக்கு பதிவு செய்து சம்பவத்தில் தொடர்புடைய நான்கு பேரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe