கோவையில் பார்சலுக்கு காத்திருக்க சொன்ன பிரியாணி கடைக்காரர் மீது தாக்குதல்! சிறுவர்கள் கைது

published 2 weeks ago

கோவையில் பார்சலுக்கு காத்திருக்க சொன்ன பிரியாணி கடைக்காரர் மீது தாக்குதல்! சிறுவர்கள் கைது

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :

https://chat.whatsapp.com/J30Hw99ftHR2wHiYb8sllV

கோவை: கோவையில் பார்சல் தர காத்திருக்க சொன்னதால் பிரியாணி கடைக்காரரை தாக்கிய 2 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.

கோவை இடிகரை ரோடு வட்டமலைபாளையத்தை சேர்ந்தவர் முகமத் இப்ராம்ஷா(47). இவர் அதே பகுதியில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். நேற்று முன் தினம் அவர் கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.


அப்போது அங்கு வந்த 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் அவரிடம் பிரியாணி பார்சல் கேட்டனர். அதற்கு முகமத் இப்ராம்ஷா சிறிது நேரம் ஆகும் என கூறி காத்திருக்க சொன்னார்.

இதில் அவர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த அவர்கள் பிரியாணி கடைக்காரரை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கி கீழே தள்ளிவிட்டனர்.


இதில் அவர் அங்கிருந்த கண்ணாடி பொருட்கள் மீது விழுந்ததால் அவருக்கு காயம் ஏற்பட்டது. இது குறித்து முகமத் இப்ராம்ஷா துடியலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்தனர்.

அதில் பிரியாணி கடைக்காரரை தாக்கியது மணியக்காரம் பாளையத்தை சேர்ந்த 17 வயது பள்ளி மாணவர், 17 வயதான தொழிலாளி மற்றும் 48 வயது நபர் என்பது தெரியவந்தது.


போலீசார் 17 வயதுடைய சிறுவர்கள் 2 பேரை கைது செய்து பிணையில் விடுவித்தனர். மற்றொரு நபரை தேடி வருகின்றனர்.
 


சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube பக்கம் :

https://www.youtube.com/channel/UCA50-DWYW32M1LWiEGmDoFw