Strong Room ல் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி ஆய்வு...

published 2 weeks ago

Strong Room ல் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி ஆய்வு...

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :

https://chat.whatsapp.com/GKcHrWOaZYqGX1TFQywYIz

கோவை: தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் 19ம் தேதி நடைபெற்று முடிந்தது. கோவை மக்களவைத் தொகுதியில் தேர்தல் முடிவடைந்ததை தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு கோவை தடாகம் சாலையில் உள்ள அரசினர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கபட்டுள்ளது.

மேலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் அறையில் ஜன்னல்கள்,கதவு உள்ளிட்ட அனைத்தும் மரப்பலகையால் அடைக்கப்பட்டு, சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.


இந்நிலையில் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான கிராந்தி குமார் நேரில் சென்று ஆய்வு செய்தார்.  கட்டுபாட்டு அறைக்கு சென்ற அவர் சிசிடிவி கேமராக்கள் முறையாக இயங்குகிறதா என பார்வையிட்டார்.மேலும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருக்கும் மாநில போலீசார் மற்றும் துணை ராணுவ படையினரை  பார்வையிட்டு பதிவேடுகளையும் ஆய்வு செய்தார். 

இந்த ஆய்வின் போது துணை காவல் ஆணையாளர் ஸ்டாலின் உடனிருந்தார்.





சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube பக்கம் :

https://www.youtube.com/channel/UCA50-DWYW32M1LWiEGmDoFw