விமான நிலையத்தில் வேலை.. 10ம் வகுப்பு படிச்சிருந்தா போதும்.. நேர்காணல் மட்டுமே!

published 1 week ago

விமான நிலையத்தில் வேலை.. 10ம் வகுப்பு படிச்சிருந்தா போதும்.. நேர்காணல் மட்டுமே!

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :

https://chat.whatsapp.com/FeDW9xUn2U8AbIvNabKtk1

சென்னை விமான நிலையத்தில் காலியாக உள்ள 422 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.  தற்போது விமான நிலையத்தில்  ராம்ப் இயக்குனர், உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.  

கல்வி  


பணி: Utility Agent - Ramp Driver

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். கனரக வாகனங்களை (HMV) இயக்குவதற்கான லைசன்ஸ் இருக்க  வேண்டும்.


பணி: Handyman/ Handywoman

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  ஆங்கிலத்தில்  வாசிக்கவும் புரிந்து கொள்ளும் திறன்  இருக்க வேண்டும். உள்ளூர் மொழி, இந்தி மொழியை புரிந்து கொள்ளும் திறன் இருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.


வயது

28 வயதுக்குட்பட்டவர்கள்  விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.


சம்பளம்  

Utility Agent - Ramp Driver -  மாதம் ரூபாய் 24,960 சம்பளம் வழங்கப்படும். உவியாளர் பணிக்கு மாதம் ரூ. 22,530 வழங்கப்படும். 3 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.  


எப்படி விண்ணப்பிப்பது?

விண்ணப்பதாரர்கள் https://www.aiasl.in/ என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தினை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்ய வேண்டும்.  தேவையான சான்றிதழ்களுடன்  ரூ.500-க்கான டிடியுடன் கீழ்கண்ட முகவரியில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் நேரடியாக கலந்துக் கொள்ள வேண்டும்.


முகவரி: Office of the HRD Department, AI Unity Complex, Pallavaram Cantonment, Chennai -600043

நேர்முகத் தேர்வு  


Utility Agent Cum Ramp Driver : 02.05.2024 (காலை 9 மணி முதல் 12 மணி வரை)

Handyman: 04.05.2024 (காலை 9 மணி முதல் 12 மணி வரை).


மேலும் விவரங்கள்

இது தொடர்பான விவரங்களை அறிந்து கொள்ள https://www.aiasl.in/resources/Recruitment%20Advertisement%20for%20Chennai%20%20Station.pdf  என்ற இணையதளத்தை பார்வையிடவும்.  





சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube பக்கம் :

https://www.youtube.com/channel/UCA50-DWYW32M1LWiEGmDoFw