சிம்பிளாக நடந்த அபர்ணா தாஸ் திருமணம்!

published 9 months ago

சிம்பிளாக நடந்த அபர்ணா தாஸ் திருமணம்!

நடிகை அபர்ணா தாஸ், மஞ்சும்மல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல் இன்று திருமணம் செய்துகொண்டனர். இந்த  புகைப்படங்கள் இணையத்தளத்தில் படு வைரலாகி வருகிறது.

விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தின்  தமிழ் சினிமாவில் அறிமுகமானார் அபர்ணா தாஸ்.   தொடர்ந்து  டாடா படத்தில் கவினுக்கு ஜோடியாக நடித்துருப்பார். இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி  வசூலைக் குவித்ததுடன் அபர்ணாவிற்கு நல்ல பெயரையும் வாங்கிக் கொடுத்தது.  இதனால்  ரசிகர்கல்  மத்தியில் மிகவும் பிரபலம் ஆனார்.  

இவர் மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்து  வருகிறார்.  மலையாளத்தில்  2018 ஆம் ஆண்டு ஃபஹத் பாசில் நடிப்பில் வெளியான நிஜன் பிரகாஷன் படத்தின் மூலம் அறிமுகமானார்.

இந்த நிலையில் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள  நடிகர் தீபக் பரம்போலை இன்று கரம் பிடித்துள்ளார். இருவருக்கும் திருமணம் நடந்து முடிந்துள்ளது. மனோகரம் என்ற மலையாள படத்தில் தீபக், அபர்ணா சேர்ந்து நடித்திருந்த போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.

கேரளாவில் உள்ள  குருவாயூர் கோவிலில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் இன்று  திருமணம் செய்துகொண்டனர். இவர்களின் திருமணம் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.  இந்த ஜோடிக்கு பலரும் வாழ்த்துக்களை கூறி  வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe