காந்த கண்களால் கவரும் மிருணாள் தாகூர்!

published 9 months ago

காந்த கண்களால் கவரும் மிருணாள் தாகூர்!

கும் கும் பாக்யா என்ற ஹிந்தி தொடரின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை  மிருணாள் தாகூர், சேலையில் க்யூட் போஸ் கொடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

சின்னத்திரையில் நடித்து வந்த நடிகை மிருணாள் தாகூர்,  கடந்த 2022 ம் ஆண்டு சீதா ராமம் படத்தில் நடிகர் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்து தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வருகிறார்.

இப்படத்தை அடுத்து இவர் நானியின் ஹாய் நானா படத்தில் நானிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்திற்கும் ஓரளவு நல்ல வரவேற்பு கொடுத்தனர்.  இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் எனப் பல மொழிகளில் வெளியானது.  லஸ்ட் ஸ்டோரிஸ் என்ற வெப் தொடரிலும் நடித்திருந்தார்.

இதனை தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது. தொடர்ந்து விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ஃபேமிலி ஸ்டார் படத்தில் சமீபத்தில் நடித்தார்.  

அவ்வப்போது தனது போட்டோ ஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். இந்த நிலையில் சேலையில் எடுத்த போட்டோ சூட் புகைப்படங்களை  பகிர்ந்துள்ளார். இதற்கு ரசிகர்கள் லைக்குகளை குவிந்துள்ளனர்.  

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe