தாலியை பற்றிய பிரதமரின் பேச்சு- கோவையில் காங்கிரஸ் கட்சி மகளிர் அணியினர் தாலியுடன் ஆர்ப்பாட்டம்...

published 9 months ago

தாலியை பற்றிய பிரதமரின் பேச்சு-  கோவையில் காங்கிரஸ் கட்சி மகளிர் அணியினர் தாலியுடன் ஆர்ப்பாட்டம்...

கோவை: ராஜஸ்தான் மாநிலத்தில் சில நாட்களுக்கு முன்பு தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பெண்களின் தாலியை திருடி விடுவார்கள் என்பது போல் பேசியிருந்தார். அவரது பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் பொதுமக்கள் என பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

 

காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள BSNL அலுவலகம் முன்பு கோவை மாநகர் மாவட்ட மகிளா காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். 

ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் கண்டன பதாகைகளை ஏந்தியும்  பெண்கள் சிலர் தாலியை ஏந்தியும் மோடி பேசியதற்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe