மத்திய அரசு வேலை: 10ம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. உடனே விண்ணப்பிங்க!

published 9 months ago

மத்திய அரசு வேலை: 10ம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. உடனே விண்ணப்பிங்க!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் கீழ் செயல்படும் சென்னை தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஓட்டுனருடன் கூடிய மெக்கானிக் (Driver Cum Mechanic) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்காலிக அடிப்படையில் மொத்தம் 15 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.  

கல்வி

இந்தப் பணியிடங்களுக்கு  விண்ணப்பிக்க 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

வயது

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் நிரப்பப்படுவார்கள்.

எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

https://nie.gov.in/ என்ற இணையதளப்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும்.  விண்ணப்பத்தின பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் நேர்முகத் தேர்வில் நேரடியாகக் கலந்துக் கொள்ள வேண்டும். நேர்முகத் தேர்வு  09.05.2024 அன்று நடைபெறும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்

ICMR-National Institute for Research in Tuberculosis, No.1, Mayor Sathyamoorthy Road, Chetpet, Chennai - 600031

மேலும் விவரங்கள்

இந்த பணியிடங்கள் தொடர்பாக மேலும் விவரங்கள் அறிந்து கொள்ள  https://nie.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தை அணுகவும்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe