ஸ்ட்ராங் ரூம்களா... சரண்டர் ரூம்களா? அடுத்தடுத்து செயலிழக்கும் சி.சி.டி.வி.,க்கள்!

published 9 months ago

ஸ்ட்ராங் ரூம்களா... சரண்டர் ரூம்களா? அடுத்தடுத்து செயலிழக்கும் சி.சி.டி.வி.,க்கள்!

நீலகிரியில் சமீபத்தில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் 173 சிசிடிவி கேமராக்களும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் இயங்கவில்லை என்ற புகார் எழுந்தது. அதிக வெப்பம் மற்றும் போதிய காற்று வசதி இல்லாததால் 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக, நீலகிரி மாவட்ட தேர்தல் அதிகாரி அருணா தெரிவித்தார்.

இதேபோல் திருப்பூர், ஈரோட்டிலும் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் சிசிடிவி கேமராக்கள் சற்று நேரத்திற்கு இயங்கவில்லை. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த பிரச்சனை ஏற்பட்டதாகவும் சிறிது நிமிடங்களில் அது சரிசெய்யப்பட்டதாகவும் மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகள் விளக்கமளித்தனர்.

இந்த நிலையில் இன்று விழுப்புரம் மாவட்ட ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் 20 நிமிடங்கள் வேலை செய்யவில்லை.
விழுப்புரம் அறிஞர் அண்ணா கல்லூரியில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இயந்திரங்கள் உள்ள அறையின் சிசிடிவி கேமராக்கள் இன்று காலை 9:28 முதல் 9:48 மணி வரை வேலை செய்யவில்லை.
இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமார் புகாரளிக்க முடிவு செய்துள்ளார்.

இதுகுறித்து அரசியல் விமர்சகர்கள் கூறுகையில், ‘அதிகபட்சம் 29 டிகிரி செல்சியல் வெப்பநிலையே பதிவான இடத்தில், ‘அதீத வெப்பம்  173 சிசிடிவி கேமராக்களையும் ஒரே நேரத்தில் செயலிழக்கச் செய்தது’ என்ற ‘அறிவியல் உண்மைகளை’ எல்லாம் தமிழகத்தில் தான் முதல் முறை கேள்விப்படுகிறோம். தமிழகத்தில் உண்மையில் அதீத வெப்பம் பதிவாகும் மாவட்டங்களில் எல்லாம் பிரச்சனைகள் எழுவதில்லை. சர்ச்சைக்குரிய தொகுதிகளில் மட்டுமே சிசிடிவி கேமராக்கள் செயலிழக்கின்றன. ஸ்ட்ராங் ரூம்களா... அதிகாரத்தின் சரண்டர் ரூம்களா என்பது ஜூன் 4ம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவுள் தான் சொல்லும்’ என்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe