கோவையில் KFCல் ஆர்டர் செய்த சிக்கனில் கம்பி...! புகாரை மெத்தனித்த நிறுவனம்!

published 9 months ago

கோவையில் KFCல் ஆர்டர் செய்த சிக்கனில் கம்பி...! புகாரை மெத்தனித்த நிறுவனம்!

கோவை: கோவை, சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த சுதாகர். இவர் பெங்களூரில் பணியாற்றி வருகிறார். அவரது மனைவி மற்றும் குழந்தைகள் சிங்காநல்லூர் பகுதியில் இருந்து வருகின்றனர். 

இந்நிலையில் அவரது குழந்தைக்கு சிங்காநல்லூர் பகுதியில் உள்ள பிரபல கே.எஃப்.சி சிக்கனில் நான்கு வகையான சிக்கன்களை  ஆன்லைனில் ஆர்டர் செய்தார். அந்த சிக்கனை உண்ணும் போது சிக்கன்குள் இரும்பு ஸ்கிராப்பை குழந்தை கண்டு தனது அம்மாவிடம் கூறினார். அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தவர். 

இது குறித்து பெங்களூரில் இருக்கின்ற அவரது கணவர் சுதாகரிடம் தெரிவித்தார். உடனடியாக அந்த கே.எஃப்.சி சிக்கன் உணவகத்திற்கு சுதாகர் தொடர்பு கொள்ள பல முறை முயற்சித்தார். ஆனால் அவர்கள் எந்த ஒரு பதிலும் அளிக்கவில்லை. இதுகுறித்து உணவு டெலிவரி செய்யும் ஜூமோட்டோ நிறுவனத்திற்கு புகார் அளித்து உள்ளார். 

அந்த நிறுவனத்தினர் அவர்களுக்கு உண்டான ஆர்டரின் பணத்தை திருப்பி அனுப்புவதாக கூறி உள்ளனர். அதை ஏற்க மறுத்த சுதாகர் தனது மனைவியிடம் அந்த உணவில் இருந்த கம்பியை புகைப்படம் எடுத்து அவருக்கு அனுப்ப கூறியுள்ளார். அந்தப் புகைப்படங்களை சுதாகர் சமூக வலைதளங்களில் பதிவு செய்து இதுபோன்று k.f.c யில் ஆர்டர் செய்யும் உணவை குழந்தைகளுக்கு கொடுக்கும் போது பெற்றோர் கவனமாக இருங்கள் எனவும் எச்சரிக்கை பதிவை பதிவு செய்து உள்ளார். 

தற்பொழுது அந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. மேலும் அந்த இரண்டு குழந்தைகளுக்கும் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு தற்பொழுது ஏற்பட்டு உள்ளதாகவும், மீதமிருந்த சிக்கனை பிரித்து பார்க்கும் பொழுது அதில் புழுக்கள் இருந்ததாகவும் வீடியோ பதிவு செய்து உள்ளார். இது குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe