இடி விழுந்த மரக்கிளையைப் போல் முறிந்து விழும் தங்கம் விலை!

published 9 months ago

இடி விழுந்த மரக்கிளையைப் போல் முறிந்து விழும் தங்கம் விலை!

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

தங்கம் விலை வரலாறுகளை மாற்றியுள்ளது. இந்தாண்டின் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏறுமுகமாக இருந்த நிலையில், மார்ச் மாதம் பவுன் ரூ.50000ஐ கடந்து விற்பனையாகத் தொடங்கியது தங்கம்.

தேர்தல் காலம் என்பதால் விலை செயற்கையாக உயர்த்தப்பட்டதாகவும், அதன் விலை படிப்படியாக குறையும் என்றும், தங்கம் எப்போது வாங்கலாம் என்பது குறித்தும் நியூஸ்க்ளவுட்ஸ் குழு, நகை தயாரிப்பாளர்களின் யூகிப்பை செய்தியாக வழங்கியிருந்தது. 

அந்த செய்தியைப் படிக்க:

அந்த வகையில் சமீப நாட்களாக தங்கம் விலை இறங்கு முகத்தில் உள்ளது.

தமிழகத்தில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15ம், பவுனுக்கு ரூ.120ம் குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.6,600க்கும் ஒரு பவுன் ரூ.52,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

18 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.13ம் பவுனுக்கு ரூ.108ம் விலை குறைந்துள்ளது. இன்று ஒரு கிராம் ரூ.5,406க்கும் ஒரு பவுன் ரூ.43,248க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் கிராமுக்கு 50 பைசா குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.86.50க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.86,500க்கும் விற்பனையாகிறது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe