கோவையில் 13 இடங்களில் தொடங்கியது நீட்; தாமதமாக வந்த மாணவர்களை திருப்பி அனுப்பிய சோக நிகழ்வு!

published 1 week ago

கோவையில் 13 இடங்களில் தொடங்கியது நீட்; தாமதமாக வந்த மாணவர்களை திருப்பி அனுப்பிய சோக நிகழ்வு!

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :

https://chat.whatsapp.com/GKcHrWOaZYqGX1TFQywYIz

கோவை: நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ் பி.டி.எஸ் ஆகிய இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நீட் நுழைவுத் தேர்வின் அடிப்படையில் நடத்தப்படுகிறது. 2024 - 25 ஆம் கல்வி ஆண்டுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த பிப்ரவரி ஒன்பதாம் தேதி முதல் ஏப்ரல் பத்தாம் தேதி வரை நடைபெற்றது. 

இந்நிலையில் நீர் நுழைவுத் தேர்வு இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. கோவை மாவட்டத்தில் இந்த தேர்வை எழுத 13 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அதன்படி பீளமேடு நேஷனல் மாடல் பள்ளி, சரவணம்பட்டி பப்ளிக் பள்ளி, புளியகுளம் ரோடு வித்யா நிகேதன் பள்ளி, புரூக் பீல்ட்ஸ் சிக்னல் கிக்கானிக் பள்ளி, சரவணம்பட்டி விவேகம் ,பள்ளி, காளப்பட்டி ரோடு சுகுணா பிப் பள்ளி, பட்டணம் எஸ்.எஸ்.வி.எம் பள்ளி,  கண்ணம்பாளையம் கே.ஐ.டி கலைஞர் கருணாநிதி தொழில் நுட்பக் கல்லூரி, சூலூர் ரத்தினவேல் சுப்பிரமணியம் கல்லூரி, எஸ்.எஸ் குளம் ஆதித்யா கல்லூரி, காளப்பட்டி ரோடு என்.ஜி.பி பள்ளி,  பொள்ளாச்சி ஏ.ஆர்.பி பள்ளி உள்பட 13 மையங்களில் நீட் தேர்வு நடைபெறுகின்றது. கோவையில் 371 அரசு பள்ளி மாணவ - மாணவிகள் உட்பட 6,967 பேர் தேர்வு எழுதுகிறார்கள்.


நீட் தேர்வு பிற்பகல் 2 மணி முதல் மாலை 5:20 மணி வரை (மூன்று மணி 20 நிமிடம்) வரை நடைபெறுகிறது. தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு உட்பட 13 மொழிகளில் நடைபெறுகிறது. இயற்பியல், வேதியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களில் இருந்து தலா 150 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு வினாக்கள் இடம்பெறுகிறது. 

நீட் தேர்வு பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் என்றாலும் மாணவர்கள் மதியம் 1:30 மணிக்குள் தேர்வு மையங்களுக்குள் வருகை தர வேண்டும். கடைசி நேரம் பதட்டங்களை தவிர்க்க மாணவர்கள் முன் கூட்டியே வீடுகளில் இருந்து தேர்வு மையங்களுக்கு புறப்பட வேண்டும் என்று தேசிய தேர்வுகள் முகமை அறிவித்து உள்ளது. நீட் தேர்வுக்காக வழங்கப்பட்டு உள்ள ஹால் டிக்கெட் வழிகாட்டுதல்களை மாணவ - மாணவிகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தேர்வில் வழக்கம் போல் கடுமையான கேள்விகள், பரிசோதனைகள் கடைபிடிக்கப்படுகிறது. தேர்வர்கள் செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை தேர்வு மையத்திற்கு எடுத்து வரக் கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆடை கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு உள்ளது. தேர்வு மையங்களும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


இந்நிலையில் கிக்கானிக் பள்ளி மையத்திற்கு தாமதமாக வந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த மாணவரை அதிகாரிகள் உள்ளே அனுமதிக்காததால் வருத்ததுடன் திரும்பி சென்றார். அதே போல் கேரள மாநிலத்தை சேர்ந்த அமிர்தா என்ற மாணவி பீளமேடு பகுதியில் உள்ள நேஷனல் மாடல் பள்ளி நீட் தேர்வு மையத்திற்கு தாமதமாக வந்ததால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மாணவியை உள்ளே அனுமதிக்குமாறு பெற்றோர்கள் வலியுறுத்திய நிலையில் அங்கிருந்த இதர பெற்றோர்களும் காவல்துறையினரிடம் இது குறித்து வலியுறுத்தினர் இது சிறிது நேரத்தில் வாக்குவாதமாக மாறியது. இருப்பினும் அம்மாணவியை அதிகாரிகள் உள்ளே அனுமதிக்கவில்லை.





சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube பக்கம் :

https://www.youtube.com/channel/UCA50-DWYW32M1LWiEGmDoFw